நித்தியகடன் பிப்ரவரி 24 2021

🌻🍥🌻🍥🌻🍥🌻🍥🌻🍥🌻

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 24*

🌻🍥🌻🍥🌻🍥🌻🍥🌻🍥🌻

🌌 *இன்றைய நித்தியகடன்*

🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌌 *இன்றைய சாதகம்*

🌌 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🌌 *இன்றைய நற்சிந்தனை*

🌌 நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எந்த ஒன்றை நாம் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு தகுந்த முயற்சி என்பது தேவை. நாம் கற்றுக் கொள்வதற்கு தகுந்த மனோபாவமும், தன்னார்வமும், அதற்கான முழு தகுதியும் தேவை. இவை இல்லாமல் நம்மால் எந்த ஒன்றையும் இந்த பூமியில் பிரபஞ்சத்தில் புரிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ முடியாது. ஏனென்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் இருக்கிறது.

🌌 *இன்றைய தற்சோதனை*

🌌 புலன்களைக் கடந்து மறைபொருளாக இருக்கும் இறைநிலை, இறைதுகள், விண்துகள், பஞ்சபூதங்கள், காந்தம், கருமையம், வினைபதிவு, பஞ்சதன்மாத்திரைகள், மனம், அறிவின் முழுமைப் பேற்றின் நிலைகளை உணர்வதற்கு நாமும் நமக்குள் இருக்கும் மறை பொருள்களை பலப்படுத்தி, பயன்படுத்தி மீண்டும் மீண்டும் இதன் வழியாக முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். மறைபொருளுக்கும் மறைபொருள் அல்லாத பொருளுக்குமிடையே நடைபெறும் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகிறது, என்பதை எல்லாம் உணர்வதற்கு நாம் தயாராக வேண்டும்.

🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌌 இந்த பூமி உருவாகி அதில் உயிரினங்கள் படிப்படியாக உருவானதற்கும் இயற்கையில் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கிறது. அந்த உண்மையான காரணத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கான முயற்சியில் நம்மை நமக்கே தெரியாமல் இயற்கை எனும் பேராற்றல் உந்தித் தள்ளுகிறது. அதைத்தான் நாம் புலன் இன்பங்களாக மட்டுமே புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றிக் கொள்ள பொருள், புகழ், அதிகாரம் இவைகளில் சிக்கிக்கொண்டு அதன் பின் ஓடிக்கொண்டிருக்கிறோம். மனப்பக்குவம் ஒன்றே இறைவனை உணர்வதற்கான ஒரே மார்க்கமாகும். வாழ்க வளமுடன்... 

🌌 *இன்றைய மூலிகை*

🌌 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🌌 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌌 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments