நித்தியகடன் பிப்ரவரி 23 2021

⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 23*

⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️♨️⏹️

🌞 *இன்றைய நித்தியகடன்*

🌞 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌞 *இன்றைய சாதகம்*

🌞 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🌞 *இன்றைய நற்சிந்தனை*

🌞 நம்முடைய ஐம்பொறி புலன்களை எதற்கெல்லாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ நாம் அதுவாக மாறிவிடுவோம். இது இயற்கையின் நீதி. நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலை காரணமாக பொறி புலன்களை பயன்படுத்தினாலும் இந்த நீதி மாறாது. இதுபோன்று பல்வேறு விதமான நீதி இயற்கையில் இருக்கிறது. இவைகளை எல்லாம் சரியாக புரிந்து கொண்டு அந்த இறை சட்ட திட்டத்திற்கு, ஏற்றவாறு நம்முடைய செயல்களை ஒழுங்கு படுத்திக் கொள்வதே துன்பமில்லா வாழ்க்கையாகும்.

🌞 *இன்றைய தற்சோதனை*

🌞 மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்த நீதி இயல்பாகவே இயங்கும் ஆற்றலும், திறமையும் உடையது. இந்த நீதியை புரிந்து கொள்வதற்கு மனதை எப்போதும் தற்சோதனையில் வைத்து அமைதியோடு பொறி புலன்களை பயன்படுத்தி வாழ வேண்டும். வாழ்க்கை இறைநீதியின்படி நடைபெறுகிறது. கருமைய தன்மைக்கு ஒத்து இயங்குகிறது. இந்த உண்மையை உயிரோடு வாழ்ந்து சிந்தித்து ஏற்றுக் கொள்வோம்.

🌞 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌞 கடந்து சென்று கொண்டிருக்கும் சூழ்நிலைகளுக்கு நமக்கு சில தகவல்கள் இருக்கிறது. நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்குள் நமக்கு ஒரு செய்தி இருக்கிறது. கடந்தகால அனுபவத்தோடு, எதிர்கால திட்டத்தோடு, நிகழ்காலத்தில் நிறைவான இறை நீதியை உணர்ந்து செயலாற்றி இன்பம் காண்போம். திட்டமிட்டு வாழும் பண்பில் நாம் சிறந்து விளங்க வேண்டும். வாழ்க்கைக் கடமைகளை அப்போதுதான் நிறைவாக செய்து மனநிறைவு பெறமுடியும். வாழ்க வளமுடன்...

🌞 *இன்றைய மூலிகை*

🌞 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🌞 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🌞 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌞 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌞 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌞 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments