நித்தியகடன் பிப்ரவரி 22 2021

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 22*

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

🔭 *இன்றைய நித்தியகடன்*

🔭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🔭 *இன்றைய சாதகம்*

🔭 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🔭 *இன்றைய நற்சிந்தனை*

🔭 நீங்கள் என்ன தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, அவை சார்ந்த எந்தவிதமான கண்டுபிடிப்பானாலும் இவைகளுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத ஒருவருக்காகவும், அவருடைய அபிமானத்தை பெறுவதற்காகவும் தான் நீங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்தத் தொழிளுக்கும் இந்த படிப்பிற்கும் எந்த சம்மந்தமே இல்லாத எதுவுமே தெரியாத ஒருவருக்குத் தான், உங்களுடைய கண்டுபிடிப்பும் உங்களுடைய படிப்பு சார்ந்த செயல்களும் சென்று சேர்கிறது என்றால் இதுதான் இறைவனின் திருவிளையாடல்.

🔭 *இன்றைய தற்சோதனை*

🔭 உங்களுடைய தொழிலும் கண்டுபிடிப்பும் உங்களுக்கு வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். ஆனால் அதை காசுகொடுத்து வாங்குபவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆக எந்த ஒன்றையும் மிகைப்படுத்தி புரிந்து கொள்ளாதீர்கள், அளவுக்கு மீறி எதன் மீதும் பற்று வைத்துக் கொள்ளதீர்கள். பொருள், புகழ், அதிகாரம், புலனிஇன்பம் இவைகள் யாவும் போலித்தனமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து விடும். ஆகவே இவைகளை விட்டு விலகி வாழ்வதே உண்மையான வாழ்வாகும் அதுவே ஆன்மீக உயர்வுமாகும்.

🔭 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔭 வாழ்வதற்கும் பிழைப்பதற்கு வேறுபாடு உண்டு. தான் தனது என்று எல்லாவற்றையும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, மிகைப் படுத்திய நிலையில் கடும் பற்றோடு இருந்து உலாவுவதற்கு பிழைத்தல் பெயரே பொருத்தமானதாகும். வாழ்தல் என்றால் தானும் தன்னை சார்ந்தவர்களும், இந்த பூமியும் பூமி சார்ந்தவைகளையும் இன்புற்று வாழ வழிவகை செய்தலேயாகும். இன்று முதல் பிழைக்காமல் வாழ்வதற்கு முயற்சிப்போம். இதில் நாமும் முயன்று வெற்றி காண்போம் நம் அடுத்த சந்ததிகளும் வெற்றி பெற உதவுவோம். வாழ்க வளமுடன்...

🔭 *இன்றைய மூலிகை*

🔭 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🔭 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🔭 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🔭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔭 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments