💥❄️💥❄️💥❄️💥❄️💥❄️💥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 21*
💥❄️💥❄️💥❄️💥❄️💥❄️💥
🌾 *இன்றைய நித்தியகடன்*
🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌾 *இன்றைய சாதகம்*
🌾 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌾 *இன்றைய நற்சிந்தனை*
🌾 ஆயிரம் வகையான விதைகளை தூவி ஒரே இடத்தில் வளர்த்தாலும், அந்த விதை முளைத்து மரமாகவும், செடியாகவும், கொடியாகவும் வரும்போது அது எந்த வகையைச் சார்ந்தது என்று தெளிவாக தெரிந்துவிடும். விதையை மட்டும் வைத்து இது இந்த மரம், இந்த செடி, இந்த கொடி, என்று சொல்வதற்கு சற்று அனுபவம் தேவை. அது இயலாத போது அது வளர்ந்த பிறகு தான் இன்னதென்று தெரியும். அதுவரை நாம் பொறுமையோடு தான் இருந்தாக வேண்டும்.
🌾 *இன்றைய தற்சோதனை*
🌾 எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவர்களும் கிடையாது. எதுவுமே தெரியாதவர்களும் கிடையாது. அவரவர்களுடைய முயற்சிக்கும், அறிவு நிலைக்கும் ஏற்ப எல்லோருக்கும் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும். இதில் குறை இருக்கிறது, நிறை இருக்கிறது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. அவரவர்களுடைய பழக்கவழக்கம், கல்வி அறிவு, அனுபவ அறிவு இதற்கேட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். குண்டலினி யோகத்தில் தவமும், தற்சோதனையும் செய்து, செய்து எல்லா விஷயங்களையும் அறிந்து புரிந்து கொள்ள முடியும்.
🌾 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌾 ஆன்மீக யோக வாழ்க்கையில் பொறுமையும் அமைதியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொறுமையோடு, அமைதியோடு இருந்து தான் நாம் எல்லா வகையான அனுபவங்களையும் எதிர்மறையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாள, கற்றுக்கொள்ள முடியும்.
பொறுமையோடு, அமைதியோடு இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம், நம்மை நாம் உணர்வதற்கும் நம்மை நாம் கடப்பதற்கும். வாழ்க வளமுடன்...
🌾 *இன்றைய மூலிகை*
🌾 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌾 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment