🏉🏮🏉🏮🏉🏮🏉🏮🏉🏮🏉
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 20*
🏉🏮🏉🏮🏉🏮🏉🏮🏉🏮🏉
🌍 *இன்றைய நித்தியகடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 நமக்குள் இருக்கக்கூடிய உயிர், மனம், அறிவு இவைகளை சாதாரண நிலையிலையே வைத்துக் கொண்டு வாழவும் முடியும், அவைகளுடைய உண்மையான தன்மையை சக்தியை பெருகச் செய்து கொண்டு அதன் வழியாக நாம் ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கைக்கு தயாராகவும் முடியும். மனித உடலும் அந்த உடலுக்குள் அமைந்திருக்கக் கூடிய இயக்கங்களும் இந்த பூமிக்கு வந்து போகும் சுவடுகள் அல்ல, ஒட்டுமொத்த இறைநிலையின் தன்மாற்றச்சரித்திரத்தின் தொகுப்பு, அடையாளம். இந்த அடையாளம் பேணி பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டும்
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருந்து நாம் நமக்குள் பெற்றிருக்கக் கூடிய இந்த அடையாளமான பதிவுகள் ஏராளம். இவற்றில் நல் வினைப் பதிவு, தீவினை பதிவு என இரு பிரிவுகள் உள்ளன. இவற்றை முறையாக நாம் ஒழுங்கமைக்கும் முயற்சிக்கு நம்மை தயார் படுத்தக்கூடிய வாய்ப்பை, நாமாக விரும்பி நம்மை அவற்றோடு இணைத்துக்கொள்ள வேண்டும். அத்தகையதொரு வாய்ப்பாக அமைந்திருப்பதுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய வேதாத்திரிய வாழ்வியல் கல்வி பயிற்சி முறையாகும்.
🌍 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌍 மனிதன் வாழ்க்கை மிகவும் பிரம்மாண்டமானது, இந்த பிரமாண்டத்தை நோக்கிய பயணத்தில் மனிதர்கள் இன்னும் திரும்பவில்லை என்பது தான் உண்மை. இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதே மனிதர்களுக்கு தெரியவும் இல்லை. பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக்கொண்டு, வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்துக்கொண்டு, சதாசர்வகாலமும் தப்பிப் பிழைக்கும் ஒரு முறையிலேயே இந்த மனிதர்களின் வாழ்நாள் முடிவடைந்து விடுகிறது. இவைகளில் இருந்து தன்னை மீட்டு எடுத்துக்கொண்டு உண்மையான வாழ்வியலுக்கு மனிதர்கள் திரும்ப வேண்டும். அந்த கற்காலத்தை வாழ்த்தி வரவேற்போம் வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌍 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌍 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌍 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment