நித்தியகடன் பிப்ரவரி 18 2021

❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 18*

❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️🚥❄️

🌳 *இன்றைய நித்தியகடன்*

🌳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌳 *இன்றைய சாதகம்*

🌳 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🌳 *இன்றைய நற்சிந்தனை*

🌳 ஒரு ஆலமரம் சுவற்றுக்குள் இருந்து முளைத்தால் நாளாக நாளாக அந்த சுவர் விரிசல் விட துவங்கி விடும். ஒரு சிறிய ஆலம் விதை ஐந்து வருடம் பத்து வருடம் கழித்து ஒரு பலம் வாய்ந்த சுவரையே இரண்டாக பிரிக்கிறது என்றால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... நீண்ட நெடிய முயற்சி சிறுதுளி பெருவெள்ளம் என்கின்ற அளவிற்கான முயற்சி, பாறை போல இறுகிப்போன உங்கள் மனதில் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை எனும் ஞான விதைகளை விதையுங்கள். இது வளர்ந்து இருகிப் போன உங்கள் மனதை உடைக்கட்டும், துகள் துகளாக மாற்றட்டும், லேசான நிலைபாடு அமையட்டும், இறை உணர்வு மேலோங்கட்டும்.இதற்கு நீண்ட நெடிய முயற்சி தேவைப்படும், ஒரு நாள் இரண்டு நாளில் இது நிறைவேறி விடாது.

🌳 *இன்றைய தற்சோதனை*

🌳 ஆலமரம் போலவும், சிறுதுளி பெருவெள்ளம் என்ற நிலைபாட்டை போலவும், நாம் விடாது முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். பலன்களை திட்டமிட்டுக் கொள்ளலாம், ஆனால் அவைகளை எதிர்பார்க்கக்கூடாது. எதிர்பார்ப்பு நிச்சயமாக நிறைவேறும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. நடக்கலாம் நடக்காமலும் போகலாம், அது அவரவர் வினை பதிவை பொருத்தது. இந்த தத்துவத்தை நன்றாக தற்சோதனை செய்து உளமாற ஏற்று வாழ்வோம்.

🌳 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌳 திட்டமிடுவதற்கும் எதிர் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு வருடம் கழித்து என்ன படிப்பை முடித்திருக்க வேண்டும், தொழிலில் முன்னேற்றம் கண்டு இருக்க வேண்டும், வீடு கட்டி முடித்து இருக்க வேண்டும், என்ற எண்ணத்திற்கு நம்முடைய வசதி வாய்ப்புகள், சூழ்நிலைகள், பொருளாதாரம் அனைத்தும் சரியாக பொருந்துமா?@ என்பதை பார்த்துக் கொண்டு திட்டமிட்டு அவைகளை உருவாக்கிக் கொள்ளலாம். எதிர்பார்ப்பு என்பது சூழ்நிலைகள், வசதி வாய்ப்புகள், பொருளாதாரம் இவைகள் எதையுமே சிந்திக்காமல் திட்டமிடாமல் வெறும் நினைவுகளால் மட்டுமே நினைத்துக் கொண்டே இருப்பது எதிர்பார்த்தலாகும். இது வேலைக்கு ஆகாது. திட்டமிட்டு செயல்புரியும் பண்பில் உயர்வோம், உள்ளதை உள்ளவாறு உணர்ந்து ஏற்று வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🌳 *இன்றைய மூலிகை*

🌳 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🌳 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🌳 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌳 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌳 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌳 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments