நித்தியகடன் பிப்ரவரி 17 2021

🎲🔷🎲🔷🎲🔷🎲🔷🎲🔷🎲

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 17*

🎲🔷🎲🔷🎲🔷🎲🔷🎲🔷🎲

💮 *இன்றைய நித்தியகடன்*

💮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💮 *இன்றைய சாதகம்*

💮 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

💮 *இன்றைய நற்சிந்தனை*

💮 அகமும் புறமும் ஒன்றே தான் இது ஒரு முனை அது ஒரு முனை, இன்பமும் துன்பமும் ஒன்றே தான் இது ஒரு முனை அது ஒரு முனை, பேராசையும் நிறை மனமும் ஒன்றே தான் இது ஒரு முனை அது ஒரு முனை, இறப்பும் பிறப்பும் ஒன்றுதான் அது ஒரு முனை இது ஒரு முனை. இந்த பூமியில் துருவப்பகுதியில் உள்ள உயிரினங்களின் தன்மைகள் வேறுபடுவதை போலத்தான் மேலே சொல்லப்பட்ட அனைத்தும், ஒரு முனையில் வேறொன்றாகவும் மற்றொரு முனையில் நேர் எதிராகவும் அமைந்திருக்கிறது. 

💮 *இன்றைய தற்சோதனை*

💮 இதனை சரியாக உணர்ந்துகொண்டு இவை அனைத்திலும் நடுநிலை வகிப்பதற்கு நாம் முறையாக ஒரு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான பயிற்சியினால் மட்டும்தான் நாம் நடுநிலையோடு எல்லாவற்றையும் சமமாக உணர முடியும். முயற்சி இல்லாமல் பயிற்சி இல்லாமல் எந்த ஒன்றும் நமக்கு அமைந்துவிடாது. மாற்றங்களும் ஏற்படப் போவதும் இல்லை. ஒவ்வொரு மாற்றத்திற்காகவும் நாம் பல்வேறு வகையான முயற்சிகள் செய்ய வேண்டும். அவ்வாறான முயற்சியில் நமக்கு பலவிதமான இடர்பாடுகளும் சறுக்கல்களும் ஆங்காங்கே உருவாகவே செய்யும். இருப்பினும் அவைகளை கடந்து நாம் நம்முடைய இலக்கை அடைவதற்கு விடாமுயற்சியோடு இருந்து வெற்றி பெறவேண்டும்.

💮 *இன்றைய பண்புப்பயிற்சி*

💮 நம்முடைய மூளை செல்களுக்குள் முறையான இனிமையான அணுக்கள் சீராக அடுக்கப்பட்டு இயங்குமேயானால், இறைநிலையே நாமாக தன்மாற்றம் பெற்று நமக்குள்ளாகவே இருப்பாகி இயங்கும் உண்மைநிலை அனுபவமாகும். மூளை செல்கள் முறையாக கட்டப்பட்டு அவைகளை சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டும். இதுவே அறிவின் முழுமை பேறுமாகும். உணர்சிவயம், கவலை, முறையற்ற எண்ணம், சொல், செயல் இவற்றால் அணுஅடுக்கு சிதைவடையும், கவனமுடன் நம்மை கண்காணித்துக் கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...

💮 *இன்றைய மூலிகை*

💮 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

💮 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

💮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💮 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments