நித்தியகடன் பிப்ரவரி 16 2021

🥦🍭🥦🍭🥦🍭🥦🍭🥦🍭🥦

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 16*

🥦🍭🥦🍭🥦🍭🥦🍭🥦🍭🥦

💯 *இன்றைய நித்தியகடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 பண்டைய காலங்களில் நாம் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம். பசுமையும் இயற்கை வளங்களும் நம்மை தொன்று தொட்டு பாதுகாத்து வந்திருக்கிறது. இன்றைய நவீன கருவிகள் நம் சிந்தனையில் விளைந்தவை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும், பூமியின் இயற்கை வளங்களையும் நிறையவே அழித்துவிட்டோம். இல்லை என்று மறுப்பதற்கு ஏதும் இல்லை.

💯 *இன்றைய தற்சோதனை*

💯 இயற்கை வளங்களை பயன்படுத்தி தான் நாம் வாழ்ந்தாக வேண்டும், ஆனால் இயற்கையை அழித்து நாம் வாழகூடாது. இந்த இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய முக்கியமான காலகட்டத்தில், நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து, "நல்வினை பதிவுகளும், இயற்கை வளங்களும்" இதை ஆழமாக சிந்தித்து தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.

💯 *இன்றைய பண்புப்பயிற்சி*

💯 எப்போது நாம் நம்மை கடந்து அக்றிணை பொருளுக்கும், உயர்திணை பொருளுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம். அப்போதுதான் நம்முடைய மதிப்பு நமக்குள்ளாக உயர்கிறது. உங்கள் உயிருக்குள் இருக்கும் இறையாண்மையை மனிதநேயத்தை உயிரோடு மீட்டெடுத்து அதனோடு வாழும் இந்தப் பண்பே இறை ஞானம் ஆகும். வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

💯 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments