நித்தியகடன் பிப்ரவரி 14 2021

🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 14*

🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️🕷️🕸️

🌌 *இன்றைய நித்தியகடன்*

🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌌 *இன்றைய சாதகம்*

🌌 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🌌 *இன்றைய நற்சிந்தனை*

🌌 ஒரு சிலந்தியின் வலைக்கு எவ்வளவுதான் காற்றடித்தாலும், மழையாலும், பாதிப்புகள் ஏற்பட்டாலும் தன்னுடைய வலையை முழுமையாக பின்னாமல் பின் வாங்கியது இல்லை. காற்றடிக்கும் போது காற்றினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்னும் பலமாக தன்னுடைய கூட்டினைகட்டிக் கொள்ளும். மழை பொழிந்து வலை அருந்தாலும் மழை நின்ற பிறகு மீண்டும் கட்ட துவங்கும். சிலந்தியை போல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருக்கும் அந்த சிலந்தியானது, ஒரு நாளும் அது தன்னுடைய செயலிலிருந்து தன்னை பின்வாங்கச் செய்து கொள்ளாது. இது போன்றதொரு வைராக்கியமும் மனோதிடமும் நமக்கும் தேவை, பல சமயங்களிலும் சூழ்நிலைகளிலும்...

🌌 *இன்றைய தற்சோதனை*

🌌 நாம் நம்முடைய உடல் செல்களை நல்ல முறையில் கட்டி, அதை பாதுகாத்து மென்மேலும் வளமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளில் இருந்து நாம் ஒரு நாளும் பின் வாங்க கூடாது. மாறாக உடல் செல்கள் சிதையும்படியான எண்ணங்களோ, செயல்களோ, பேச்சுக்களோ நம்மிடம் இருக்க கூடாது. உடல் செல்களை கட்டி காப்பாற்றுவதே நம்முடைய முக்கியமான, குறிக்கோளாகவும் கோட்பாடாகவும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் உடல் செல்கள் சிதையும் போது மனச்சிதைவும், மனச்சோர்வும், உடல் நோயும் பெருகும். இந்த உடல் செல்கள் பல்வேறு காரணங்களால் சிதைக்கப்படுகிறது. அவை என்னவென்றால்...

🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌌 பேராசை, கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு, மனப்பான்மை, வஞ்சம், இத்தகைய எண்ணங்களாலும், இதை சார்ந்த ஒழுங்கற்ற செயல்களாலும் நம்முடைய உடல் செல்கள் சிதைகிறது. இந்த சிதைவுகளின் விளைவாக நாம் இந்த பிறவியில் பெற வேண்டிய நற்பயன்கள் யாவையும் தள்ளி போட்டு கொண்டு இருக்கிறோம். இவ்வாறாக நாம் கவனமில்லாமல், நம்மை நாம் கண்காணிக்காமல், அலட்சியத்தோடும், அறியாமையோடும் வாழும்போது, மனதில் குழப்பமும், வாழ்க்கையில் சிக்கலும், உடலில் நோய்களும் பெருகுகின்றன. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்து இவைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்வோமாக. வாழ்க வளமுடன்...

🌌 *இன்றைய மூலிகை*

🌌 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🌌 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌌 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments