🔷💥🔷💥🔷💥🔷💥🔷💥🔷
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 13*
🔷💥🔷💥🔷💥🔷💥🔷💥🔷
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 மனதிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள், மனதிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. உடலோடு மனம் இணைந்து இயங்குவதால் உடல் இயக்கம் உள்ளவரை மன இயக்கம் இருந்துகொண்டே தான் இருக்கும். இருப்பினும் மனம் தவத்தில் ஈடுபடும்போதும், உடல் தளர்த்தலில் ஈடுபடும்போதும், மனமானது ஓய்வை சந்திக்கிறது. இந்த ஓய்வு உயிருக்குள் மனம் அடக்கம் பெற்றதால் கிடைத்த நிறைவாகும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 தியானம் செய்யும்போது மனம் உயிராகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. உடல் தளர்த்தலின் போதும் மனம் உடல் இயக்கமின்றி அசைவற்ற நிலைக்கு மனம் தன்னை உயர்த்திக் கொள்கிறது. இவ்வாறாக மனம் தன்னை தானே புதுப்பித்துக் கொள்ள கூடிய இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 மனதிற்கு ஓய்வு கிடைத்து அது மீண்டும் இயக்கத்திற்கு வரும்போது, ஒரு முழுமையான நிறைவான நிலையில் இயங்குவதற்கு தயாராகிறது. இந்த நிலைபாட்டிற்கு மனம் மீண்டும் மீண்டும் பிரயாசப் படுகிறது. மனதிற்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். அதன்பின்னர் மனம் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். எல்லா வகையான நிறைவுகளையும் உங்களுடைய அனுபவமாக மாற்றி அமைத்துக்கொள்ள இது பேருதவியாக அமையும். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌀 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌀 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌀 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment