நித்தியகடன் பிப்ரவரி 08 2021

🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 08*

🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️🌀🕳️

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் தனித்துவம் வாய்ந்தது உயிர் விண்துகள்கள் "the unique" மற்ற நான்கு பௌதீக தன்மாற்றமும் விண்ணினுடைய கூட்டு இயக்க அமைப்பே ஆகும். இந்த மனித சரீரத்துக்குள் உயிரென்று பேசப்படும் விண்துகள்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற நான்கு பௌதீக பிரிவுகளுக்குள் ஊடுருவி விண்துகள்கள் அதன் சிறப்பினை வெளிப்படுத்திக் கொள்ளும் அற்புதமான இயக்கமுடையது. விண்துகள்கள் பல்வேறு வகையான தன்மைகளோடும், தரத்தோடும் இயங்குகிறது. உயிரும் அதே விதியின் கீழ் இயங்குகிறது. தனி மனிதனுடைய தன்மையும் தரமும் உயரும்போது அதற்குத் தகுந்த உயிரியக்கம் அமைகிறது, விண்துகள்களினுடைய இணைப்பு ஏற்படுகிறது. (quality and quantity)

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 இந்த விண்ணாக இயங்கும் உயிர்துகள்களை நாம் நமக்குள் ஆராய்ந்து முழுமையாக புரிந்து கொள்ள முடியும். வயதும், உடல் வலுவும், அதனோடு இணைந்து இயங்கும் பண்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாலிப வயதிலேயே இந்த ஆராய்ச்சியை துவங்கினால் நிச்சயமாக உயிரைப் பற்றிய ரகசியங்கள், அனைத்தையும் முயற்சிக்கு தக்கவாறு உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் உயிரைப் பற்றி உங்களால் உணர முடியாவிடில் வேறு யாராலும் முடியாது. இதற்கு தேவையானதோ முறையான பயிற்சி.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 உயிரினுடைய தன்மையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நமக்கு சில பண்புகள் தேவைப்படுகிறது. இந்த பண்பை நாம் வாழ்க்கையாக எல்லாவகையிலும் வாழும் போது அது உயிரினுடைய அடையாளத்தை நமக்குள் உணர்ந்து கொள்ளும் தன்மையாக உயருகிறது. விடாமுயற்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம், நடுநிலையோடு இருந்து வாழுதல் இப்பண்புகளில் வாழும்போது, உயிர் உணர்வுகிட்டும், ஆத்ம தரிசனம் உண்டாகும். எதனிலும் சார்புத் தன்மை இல்லாமல், கடும் பற்று இல்லாமல் நடுநிலையோடு சிந்தித்து, செயலாற்றும் பண்பே, உயிரை நமக்குள்ளாக தெளிவாக உணர்த்த கூடிய தன்மையாகும். இப்பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்..!

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🍁 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🍁 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments