நித்தியகடன் பிப்ரவரி 07 2021

💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 07*

💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

🎯 *இன்றைய நித்தியகடன்*

🎯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎯 *இன்றைய சாதகம்*

🎯 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🎯 *இன்றைய நற்சிந்தனை*

🎯 இந்த மனித சமுதாயம் நிறைய குற்றங்களாலும், பிழைகளாலும், தவறுகளாலும், நிரப்பப் பட்டிருப்பதாகவும், பொய், சூது, களவு இவையெல்லாம் இருப்பதாகவும், நாம் காணுகின்றோம் உணர்கின்றோம். இவை அனைத்தும் உண்மை தானா என்பதை வாருங்கள் கொஞ்சம் சிந்தித்து பார்ப்போம். "குற்றவாளி பாவி என்று யாரும் இல்லை உலகிலே குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயமே" வேதாத்திரி மகரிஷி இந்த வாசகத்தின் மூலமாக நமக்கு சொல்லுகின்ற உண்மை என்னவென்றால்...

🎯 *இன்றைய தற்சோதனை*

🎯 இந்த மனித சமுதாயத்தில் எவரொருவருடைய செயலிலும் குற்றமோ பாவமோ இல்லை. அவர்களெல்லாம் இவ்வாறு செயல் புரிகிறார்கள் வாழ்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வாழ்ந்து காட்டியவர்கள், மேலும் இது தான் வாழ்க்கை என்று கற்பித்தவர்களுமே காரணமாவார்கள். மேலும் இந்த உண்மையை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள, நம் மனதை படிப்படியாக பண்படுத்தி நம்மையே சாட்சியாக வைத்து, நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும்போது, இதன் உண்மைகளை நம்மால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும். 

🎯 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎯 இந்த உண்மைகள் எல்லாம் நமக்கு தெள்ளத்தெளிவாக தெரியும் வரை, நம் மனதிற்கு அறிவே தெய்வம் என்ற முழுமையான உணர்வு வரும் வரை, இந்த உடல், உயிர், மனம் இவைகளை பண்படுத்தக்கூடிய பயிற்சி முறைகளில் நம்மை ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை நான்கும் நம்மை இந்த உண்மைகளை விளங்கிக் கொள்ளக்கூடிய பகுதிகளுக்கு மிக சுலபமாக அழைத்துச் செல்லும். அவைகளுக்கு நமக்குள் நாம் இடம் கொடுத்து வாழும்போது, வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான சிக்கல்களும், இன்னல்களும், இடர்பாடுகளும் படிப்படியாக அகற்றப்பட்டு நிறைவான வாழ்க்கை ஒன்றை, நாமும் நம் குடும்பமும் வாழ்வோம் என்பது உறுதி. வாழ்க வளமுடன்...

🎯 *இன்றைய மூலிகை*

🎯 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎯 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments