🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 05*
🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀🔥🌀
☘️ *இன்றைய நித்தியகடன்*
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
☘️ *இன்றைய சாதகம்*
☘️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
☘️ *இன்றைய நற்சிந்தனை*
☘️ விண்துகள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல வகையான மூலகங்கள் இருக்கின்றன. இந்த மூலகங்கள் அனைத்திலும் இருந்து வீசும் காந்த அலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகளை, தரத்தை உடையதாகும். நம்முடைய தரம் என்னவோ, தன்மை என்னவோ அதற்கு தகுந்த காந்த அலையோடு நாம் இணைவோம், நம்மோடு அதுவும் இணையும். இயற்கையின் விஞ்ஞான மெய்ஞான நீதி இவ்வாறெல்லாம் இருப்பதை, தெளிவாக உணர்ந்து கொண்டு நம்முடைய தரத்தை தன்மையை உயர்த்தினால், எல்லா வகையான பிரபஞ்ச உண்மைகளையும் நமக்குள்ளாகவே நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
☘️ *இன்றைய தற்சோதனை*
☘️ சித்தர்கள் வேறு யாரோ அல்ல அக்காலத்தில் தெளிவாக விஞ்ஞானத்தை, மெய்ஞ்ஞான ரீதியாக உணர்ந்தவர்களாவார்கள். அவர்கள் இந்த மூலகங்களை 92, தத்துவங்கள் என்று பல நூல்களில் எழுதி இருக்கிறார்கள். இன்று விஞ்ஞானத்தில் 103, மூலகங்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். புறத்தில் இருக்கும் அனைத்தையும் நம் அகத்திலேயே உணரக் கூடிய சிறப்பு மனிதர்களுக்கு இருக்கிறது. இதனை முறையாக வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பில் நம்மை இணைத்துக் கொண்டால் போதும். அத்தகையதொரு வாய்ப்பே வேதாத்திரியம்.
☘️ *இன்றைய பண்புப்பயிற்சி*
☘️ கேள்விகள் கேட்காமல் பதில் கிடைக்காது. கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசுபிரான் தெளிவாக கூறுகிறார். கேள்விகளை வெளியே கேட்க சொல்லி ஆர்வத்தை தூண்டவில்லை. மாறாக அவர் அவர்களுக்குள்ளாக கேள்விகளை கேட்டு அதற்கான விடையை உங்களுக்காகவே உணருங்கள், என்பதைத்தான் இவ்வாறான வார்த்தைகளில் விளக்கியுள்ளார்கள். ஆக எது எப்படி இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பையும் கடமையையும் நாம் ஒருபோதும் தட்டிக்கழித்துவிடக் கூடாது. கடமை உணர்ந்து பொறுப்போடு வாழும் பண்பில் நாளுக்குநாள் சிறந்து ஓங்குவோமாக. வாழ்க வளமுடன்...
☘️ *இன்றைய மூலிகை*
☘️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
☘️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
☘️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
☘️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
☘️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
☘️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
☘️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment