🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 04*
🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶🕳️🔶
🌾 *இன்றைய நித்தியகடன்*
🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌾 *இன்றைய சாதகம்*
🌾 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌾 *இன்றைய நற்சிந்தனை*
🌾 ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மையும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மையும் உள்ளடக்கமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றில் ஏதேனும் ஒன்று உயர்வு பெறுகிறது. இந்த இரண்டையும் சமமாக வைத்து வாழ வேண்டியது தான் மனிதனுடைய வாழ்வியல் கோட்பாடு. இந்த தன்மைகள் மிகினும் குறையினும் மனதில் மூளை செல்களில் அனுஇயக்க அமைப்பில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும்.
🌾 *இன்றைய தற்சோதனை*
🌾 ஆண்-பெண் தன்மைகளை சமச்சீர் செய்து வாழ்வதற்கான வாழ்வியல் பயிற்சியே மனவளக்கலை. இந்த மனவளக்கலையில் தன்னை நாள் தவறாமல், தன்னார்வத்தோடு இணைத்துக் கொண்டு சிந்தனையில் உயர்ந்து எல்லா வகையான கோட்பாடுகளையும் சரிவர பின்பற்றும்போது, மனிதனின் உண்மையான விஞ்ஞான மெய்யான இயக்கங்கள், வாழ்வியல் மனிதனுக்குள் இனிதே துவங்குகிறது. இதற்கு உங்களை ஆழமாக தற்சோதனையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
🌾 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌾 "பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற திருக்குறளின் உட்பொருளை உணர்ந்து எனக்கு நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும், என்னுடைய கருமையதன்மைதான் காரணம், ஆக என்னுடைய கருமையத்தின் தன்மையை நான் சீராக தரமுயற்தி அமைப்பதற்கு, அதற்கு உகந்த பண்புகளை வாழ்வியலாக ஏற்று வாழ்வேன் என்ற உறுதி மொழியோடு, வாழத் துவங்கும் நாள் முதற்கொண்டு மனித வாழ்க்கை உண்மையை நோக்கி பயணிக்கிறது. இதனை உணர்ந்து வாழ்வோம் தனக்கும், பிறர்க்கும் தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்...
🌾 *இன்றைய மூலிகை*
🌾 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🌾 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🌾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment