🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 03*
🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱🎲🎱
🌏 *இன்றைய நித்தியகடன்*
🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌏 *இன்றைய சாதகம்*
🌏 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌏 *இன்றைய நற்சிந்தனை*
🌏 நீங்கள் வாழும் இந்த பூமி, நீங்கள் செய்யும் தொழில், உங்களிடம் இருக்கும் பொருள், புகழ், அதிகாரம் இவை எதுவுமே உங்களிடம் நிரந்தரமாக இருக்கப் போவது கிடையாது. நேற்று வேறொருவரிடம் இருந்தது, இன்று உங்களிடம் இருக்கிறது. இன்று உங்களிடம் இருப்பது நாளை வேறு ஒருவரிடம் இருக்கப்போகிறது. இதுபோலவே வித்து தொடராக வந்திருக்கும் நாமும் நமக்குள் எழக்கூடிய எண்ணங்களும். நேற்று வேறொருவரிடம் இருந்தது, இன்று நம்மிடம் நம் எண்ணமாக இருக்கிறது. இந்த உண்மையை உங்களுடைய அடி மனதிற்குள் போய், அங்கே வாழ்ந்து ஆய்வு செய்து உணர்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
🌏 *இன்றைய தற்சோதனை*
🌏 தற்சோதனை என்பது நமக்குள் இருக்கும் தேவை இல்லாதவைகளை அகற்றி களையெடுத்தல் ஆகும். அகற்றுவதற்கும் களையெடுப்பதற்கும் தயக்கம் காட்டினாலோ, அல்லது தள்ளிப் போட்டாலோ அதனுடைய துன்பத்தை அனுபவிக்க போவது, வேறு யாரோ அல்ல நீங்களே தான். ஒன்றே செய்! ஒன்றும் நன்றே செய்! அதையும் இன்றே செய்.
🌏 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌏 எந்த ஒன்றை பெற வேண்டுமானாலும் அதற்கு ஈடு இணையாக மற்றொன்றை இழந்தே தீரவேண்டும். பெறுவதற்கு முயற்சி செய்யும்போது இழப்பதற்கும் துணிவு வேண்டும். அந்தத் துணிவை வளர்த்துக் கொள்ளும் பண்பு தான் ஆன்மீகத் துறையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை தெளிவாக புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🌏 *இன்றைய மூலிகை*
🌏 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌏 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🌏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌏 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment