🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 01*
🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️⭕🅾️
📢 *இன்றைய நித்தியகடன்*
📢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
📢 *இன்றைய சாதகம்*
📢 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
📢 *இன்றைய நற்சிந்தனை*
📢 உங்களுடைய எண்ணம், பேச்சு, செயல், இவையாவும் உங்களுடைய தன்மையில் இருந்து வெளிப்படுகிறது. உங்களுடைய அறிவின் தரமும், தன்மையும் என்னவோ, அதுவேதான் உங்களுடைய பேச்சின் வழியாகவும், செயலின் வழியாகவும், எண்ணத்தின் வழியாகவும் வெளிப்படும். இதனை தாண்டியோ, இதனை மீறியோ உங்களுடைய எண்ணம், சொல், செயல் இவை அமைவதற்கு வாய்ப்பே இல்லை.
📢 *இன்றைய தற்சோதனை*
📢 அமைதியாக மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு இதனை நன்றாக ஆய்வு செய்யுங்கள். உங்களுடைய தன்மையே உங்களின் எல்லா வகையான செயல்களிலும் வெளிப்படும். இந்த வெளிப்பாடுகள் அனைத்தும் உங்களுக்குள் உள்ளடங்கி இருக்கக்கூடிய தன்மையே ஆகும். தவமும், உடற்பயிற்சியும், காயகல்ப பயிற்சியும், தற்சோதனை பயிற்சியும் உங்களுடைய கருமையத்தை நாளுக்கு நாள் தூய்மைபடுத்தும், தரத்தை உயர்த்தும். தற்சோதனை செய்யுங்கள் எல்லா வகையிலும், உங்களை நீங்களே.
📢 *இன்றைய பண்புப்பயிற்சி*
📢 மனதின் உணர்ச்சி தன்மைக்கும் உணர்வு தன்மைக்கும் வேறுபாடு உண்டு. உணர்ச்சி தன்மை தேவையற்ற சிக்கல்களையும், உடல் நோய்களையும் உருவாக்கிவிடும். உணர்வு நிலை இதில் நாமும் துன்பப்படாமல், பிறரையும் துன்பப்படுத்தாமலும், இயற்கையின் ரகசியங்கள் அனைத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். இப்பண்பில் உயர்வோம் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
📢 *இன்றைய மூலிகை*
📢 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
📢 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
📢 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
📢 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
📢 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
📢 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
📢 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment