🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 30*
🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶🔰🔶
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 இந்த கருமையத்திற்கு இந்த நாளில் இதுதான் நடைபெறும் என்பது நிச்சயக்கப்பட்ட ஒன்றாகும். இதில் அவரவருடைய நன்னடத்தை அடிப்படையில் வரக்கூடிய லாபமும் நட்டமும் திருத்தி அமைக்கப்படுகிறது. மனவளக்கலை பயிற்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளும் அன்பர்கள், இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு நன்கு ஆராய்ச்சி செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் இதற்கான பாடங்கள் நடத்தப்பட்டிருக்கும்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 சிறந்த மனவளக்கலை பயிற்சியின் விளைவாக நமக்கு அன்றாட வாழ்க்கையில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள் அனைத்தும் சீர்திருத்தப்பட்டு, நம்முடைய நடத்தையை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிப்பதை நம்மால் உணர முடியும். எப்போதும் எங்கேயும் நாம் முன்னுக்கு பின் முரண்பாடான சிந்தனைகளையும் செயல்களையும், யாரிடமும் வைத்துக் கொள்ளுவது இல்லை என்ற சமயத்தில் நமக்கு நன்மையே நடைபெறும்.
🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎱 சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் இது போன்ற பண்புகளில் உங்களை ஒவ்வொரு கணமும் உயர்த்திக் கொள்ளுங்கள். தன் நிலையை உணர்வதற்கும், தன் நிறையை, குறையை அறிந்து கொள்வதற்கும், தன்னிடத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அதற்கென திட்டமிட்டுக் கொண்டு அவ்வாறே வாழ்வதற்கும், நாம் எப்போதும் நம்மை முன் நடத்திச் செல்ல வேண்டும், முனைப்போடு வாழவும் வேண்டும். வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎱 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment