🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 27*
🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌♻️🌌
🧠 *இன்றைய நித்தியகடன்*
🧠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🧠 *இன்றைய சாதகம்*
🧠 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🧠 *இன்றைய நற்சிந்தனை*
🧠 மனம் நமக்கு கிடைத்த அழகானதொரு வரம். இந்த வரமானது எப்படி இருக்கிறது என்றால், அட்சய பாத்திரத்தை அதன் விஷயம் அறிந்து பயன்படுத்தும் போது, அது அள்ள அள்ள குறையாமல் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் விஷயம் தெரியாமல் பயன்படுத்தும் போது, அதனை வைத்து கையேந்த கூடிய நிலையாகவே அமையும். மனதை நாம் எப்படி புரிந்து வைத்திருக்கின்றோமோ அதை பொருத்து மனம் நமக்கு பயன்படுகிறது.
🧠 *இன்றைய தற்சோதனை*
🧠 நம்முடைய கரு மையத்திற்கும் இறைநிலையினுடைய கருமையைதிற்கும் இணைப்பை ஏற்படுத்த கூடிய, ஒரு முழுமையான நிறைவான பாலமாகவே மனம் இருக்கிறது. இதன் பெருமையையும் சிறப்பையும் தெரிந்து கொண்டு இதனை சரியாக பயன்படுத்தினால், இந்த மனதிற்கு ஈடு இணையாக எதுவுமே கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் மனதினால் முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. ஆனால் மனம் முழுமை பெற வேண்டும். எந்த வகையிலும் முறையிலும் மனம் சிதைவடையாமல் இயங்கக்கூடிய இயக்கத்திற்கு பெயரே முழுமைப் பேறு.
🧠 *இன்றைய பண்புப்பயிற்சி*
🧠 சரியானதொரு வழிகாட்டல் மனதிற்கு தேவை. அதை முறைப்படுத்தி பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மனதின் சிறப்பு மனம் முழுமை பெற்ற நிலையில்தான், மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அறிவின் வழியாகத் தான் மனதை முழுமைப்படுத்த முடியும். அதுவரையில் மனதை முழுமைப்படுத்து வதற்கு, எல்லா வகையிலும் பயிற்சியை மேற்கொண்டு விடாமுயற்சி செய்ய வேண்டும். அகத்தவம், அகத்தாய்வு, உடல்பயிற்சி, காயகல்பம்,தற் சோதனை இந்த கட்டமைப்பை கொண்டு, நம் கருவூலம் வழியாக கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...
🧠 *இன்றைய மூலிகை*
🧠 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🧠 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🧠 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🧠 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🧠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🧠 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment