🔶💢🔶💢🔶💢🔶💢🔶💢🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 26*
🔶💢🔶💢🔶💢🔶💢🔶💢🔶
🗿 *இன்றைய நித்தியகடன்*
🗿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🗿 *இன்றைய சாதகம்*
🗿 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🗿 *இன்றைய நற்சிந்தனை*
🗿 ஒரு மூங்கில் தன்னிடத்தில் உள்ள தேவையில்லாத வைகளை தியாகம் செய்ததால் புல்லாங்குழானது. கடும் பாறை தன்னிடத்தில் உள்ள தேவையில்லாத வைகளை தியாகம் செய்ததால் சிற்பமானது. இது போன்று தியாகம் செய்யும் எதுவும் சிறந்த நிலைக்கு உயர்ந்து வந்துவிடும். மனிதனுக்குள் இருக்கின்ற தேவையில்லாததையெல்லாம் தியாகம் செய்தால் போதும், உங்களால் உயர்ந்த நிலைக்கு உயர முடியும். பெறுவதற்கு எதுவுமேயில்லை, எல்லாமும் நமக்குள் நிறைவாக உள்ளடக்கமாகவே இருக்கிறது. இழப்பதற்கு தான் நிறைய இருக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம் பயிற்சி விடா முயற்சி, இது மட்டும்தான்.
🗿 *இன்றைய தற்சோதனை*
🗿 சிறிது சிறிதாக தியாகம் செய்ய துவங்கலாம். உங்களை நீங்கள் நன்றாக சிந்தித்து உணர்ந்து கொண்ட பின், உங்களுக்குள் இருக்கும் தேவையில்லாததில் சின்னதாக ஒன்றை எடுத்துக்கொண்டு, முதலில் அதை விட்டுக் கொடுப்பதற்கும், தியாகம் செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள். சிறுதுளி பெருவெள்ளம் ஆகும். சின்ன சின்னதாக தேவையில்லாததை எல்லாம் நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளும் போது, நாளடைவில் பெரிதாக நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும். எதனையும் முழுமையாக உணர்ந்து, தெளிந்து தேவையில்லாத அனைத்தையும், தியாகம் செய்து விடலாம். தற்சோதனை இதற்கு நமக்கு பேருதவியாக இருக்கும்.
🗿 *இன்றைய பண்புப்பயிற்சி*
🗿 பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவைகளிலிருந்து உங்களுடைய தியாகத்தை துவங்குங்கள். தேவையற்ற மன பாரங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், மயங்காமல் மதிநுட்பத்தோடு ஆராய்ந்து,
விழிப்பு நிலையோடு வாழ்க்கையை செவ்வனே, சிறப்பாக வாழ்ந்து உயர்ந்து நில்லுங்கள். மற்றவை அனைத்தும் இயற்கை எனும் பேரறிவு நமக்குள் ஞானமாக உயர்த்தி வைக்கும். வாழ்க வளமுடன்...
🗿 *இன்றைய மூலிகை*
🗿 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🗿 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🗿 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🗿 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🗿 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🗿 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment