🔷🏮🔷🏮🔷🏮🔷🏮🔷🏮🔷
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 25*
🔷🏮🔷🏮🔷🏮🔷🏮🔷🏮🔷
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 நமக்கு மூன்று வகையான உடல்கள் இருக்கின்றன, அவை பருவுடல், உயிருடல், காந்த உடல். இவ்வகையான உடல்களில் பருவுடலானது ஒரு எல்லைக்கு உட்பட்டது. உடலளவு அதனுடைய இயக்கங்களும் செயல்பாடுகளும் முடிந்துவிடுகிறது. இந்த உயிருடலும், காந்த உடலும் அவ்வாறு இல்லை. அவைகளுக்கு சரியான வாய்ப்பு மட்டும் அமையுமேயானால் இந்த பிரபஞ்சம் முழுவதிலும், அதில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தோடும் இணைந்து இயங்க கூடிய ஆற்றலையும், திறமையையும் உள்ளடக்கமாக பெற்றுள்ளது.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 இந்த இணைப்பும் இயக்கமும் எவ்வாறு நடைபெறுகிறது, என்பதை மனவளக்கலை பயிற்சியில் முறையோடு, முறையாக நம்மை இணைத்துக் கொண்டு, பொறுமையாக முயற்சி செய்யும்போது, இதனுடைய விஞ்ஞான மெய்ஞானத்தை எவராயினும் அனுபவமாகப் பெறமுடியும். இதற்கு தேவையானது எல்லாம் பண்பட்ட, அதற்கு தகுதியான மனோநிலை மட்டும்தான். எண்ணம், சொல், செயல் இவைகளை பயன்படுத்தும்போது மனித நேயம், இறை தன்மை இதன் அடிப்படையிலேயே இந்த இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் அனுபவமாகும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 இந்த மண்ணுலகில் தற்காலத்தில் மனிதர்கள்தான் பலவகையான சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டு, அதற்குள் தானும் சிக்குண்டு மற்றவர்களையும் சிக்கவைத்து, இதிலிருந்து தப்பி செல்ல முடியாத அளவிற்கு ஒரு மாயையான வாழ்க்கை முறைக்குள், தன்னுடைய வாழ்நாட்களை மனிதர்கள் கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்கள் வாழ்க்கையில் மனிதர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சிக்கல்கள் தான் அதிகம். இந்த அண்டவெளியில் எந்த ஒரு சிக்களுமில்லாமல் எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் சுலபமாக முடிகிறது. அதற்கு முழுமையாக வேதாத்திரியம் பயன்படுகிறது. பயன்படுத்தி பண்படைவோம் பயன் காண்போம். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🍁 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🍁 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment