🔰🌸🔰🌸🔰🌸🔰🌸🔰🌸🔰
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 24*
🔰🌸🔰🌸🔰🌸🔰🌸🔰🌸🔰
🕸️ *இன்றைய நித்தியகடன்*
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🕸️ *இன்றைய சாதகம்*
🕸️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🕸️ *இன்றைய நற்சிந்தனை*
🕸️ இந்த ஒன்பது நிலைகளில் எளியமுறை உடற்பயிற்சியை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஏன் வடிவமைத்துள்ளார்கள்? என்று உடற்பயிற்சி புத்தகத்தில் இந்த வாசகத்தை ஆசான் அவர்கள் தெளிவாக விவரித்துள்ளார். அவை என்னவெனில்
உடல் செல்களில் உள்ள விலங்கின பதிவுகளை போக்கிக் கொண்டு, ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்காகவே, இந்த எளிய முறை உடற்பயிற்சி உங்களுக்கு அன்போடும், அருளோடும் வடிவமைத்து கொடுத்துள்ளேன்.
🕸️ *இன்றைய தற்சோதனை*
🕸️ கைகளையும், கால்களையும், உடலையும் அசைப்பது அல்ல இந்த உடற்பயிற்சி. உடல், மனம், உயிர் அனைத்தையும் இணைத்துக்கொண்டு மனம் ஒன்றி செய்வதே இந்த எளியமுறை உடற்பயிற்சி ஆகும். இதில் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை தற்சோதனை செய்து, அவைகளை குறிப்பெடுத்து எழுதிக் கொள்ளுங்கள். அப்போதுதான் எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையிலும் இந்த உடற்பயிற்சியை விட்டு விலகாது நாள் தவறாமல் நாம் நம்மை இணைத்துக் கொள்வோம்.
🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕸️ விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த கலவையாக, இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒருங்கிணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இவைகளை முறையாக நாம் அறிந்து உணர்ந்து தெளிவு பெறுவதற்கு, சிறப்பானதொரு பயிற்சி தேவைப்படுகிறது. அந்த பயிற்சி தான் மனவளக்கலை, வேதாத்திரியம் காலத்துக்கு ஏற்ற முறையில் இறை அருளாலும் குரு அருளாலும் அன்போடு வழங்கப்பட்டிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு எண்ணிப்பார்த்து பயிற்சியோடு பயிற்சியாக ஒன்றிக் கலந்து அதுவாகி வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🕸️ *இன்றைய மூலிகை*
🕸️ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🕸️ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕸️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment