நித்தியகடன் ஜனவரி 23 2021

♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 23*

♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️🍀♦️

〰️ *இன்றைய நித்தியகடன்*

〰️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

〰️ *இன்றைய சாதகம்*

〰️ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.

〰️ *இன்றைய நற்சிந்தனை*

〰️ நம்முடைய உடலில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்று ஐவகை இயக்கத்திலும் ஆறாவது புலன்களைக் கடந்து மனமாக இயங்கக்கூடிய இவை அனைத்துமே காந்தமாகும். இந்த காந்தத்தின் வழியாகவே அனைத்து வகையான புரிதல்களும் ஏற்படுகின்றன. இணக்கத்தன்மை, படைப்புத்திறன், ஏற்புத்திறன், பெருந்தகைமை, நுண்மாண் நுழைபுலன் இந்த ஐந்து வகையான பண்புகளும் நமக்குள் உயர்வு பெறுவதற்கு அடிப்படையாக இருப்பது இந்த காந்தமே ஆகும்.

〰️ *இன்றைய தற்சோதனை*

〰️ தவ நிலைகளில் நாம் உயர்வதற்கும், உள்ளுணர்வு தன்மைகள் நமக்குள் பெருகுவதற்கும், இந்த பேரியக்க மண்டலத்தைப் பற்றிய உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்வதற்கும், நம் உடலுக்குள்ளாக நடைபெறக்கூடிய உயிரியக்கம், மன இயக்கம், அணுக்களின் இயக்கம் இவைகள் சார்ந்த உண்மைகளை அனுபவமாக பெறுவதற்கும், நமக்கு பேருதவியாக இருந்து நமக்குள்ளாகவே இயங்கிக் கொண்டிருக்க கூடியது காந்த இயக்கமே ஆகும்.

〰️ *இன்றைய பண்புப்பயிற்சி*

〰️ "எந்த ஒன்று அறிந்திடில் இறைவன் முதல் உயிர் வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்" என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் காந்தத்தின் வழியாகவே அனைத்து செயல்பாடுகளும், இயக்கங்களும், தன் மாற்றங்களும் நடைபெறுகிறது என்ற பேருண்மையை அனுபவமாகப் பெறுவதற்கு தான் மனவளக்கலை பயிற்சிகள் மூலமாக, நமக்கு படிப்படியாக விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே வருகிறார்கள். இதில் முன்னேற்றம் காண்பது இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நம்முடைய அனைவரது கடமையும் பொறுப்புமாகும். உயர்வோம் அடுத்தடுத்த நம்முடைய சந்ததிகள் உயர்வதற்கு. வாழ்க வளமுடன்...

〰️ *இன்றைய மூலிகை*

〰️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

〰️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

〰️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

〰️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

〰️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

〰️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments