🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 22*
🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱🔶🎱
💭 *இன்றைய நித்தியகடன்*
💭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💭 *இன்றைய சாதகம்*
💭 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
💭 *இன்றைய நற்சிந்தனை*
💭 கனவுகளோடும், கற்பனையோடும் நாம் வாழ்ந்தது போதும் என்ற முடிவுக்கு வந்து விடுங்கள். இந்த மனித சமுதாயத்தின் வாழ்க்கை வரலாற்றில், இந்த மனிதர்கள் சந்தித்த துன்பங்களுக்கெல்லாம் இடர்பாடுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தது, அவரவர்களுடைய கற்பனையும் கனவும் தான். இந்த கனவும், கற்பனையும் நன்மையாக (positive) இருக்குமேயானால், அது விஞ்ஞான வளர்ச்சியாகவும் மெய்ஞான எழுச்சியாகவும் அமையும். அதே கனவும் கற்பனையும், அறிவுக்கு பொருந்தாததாக அமையும் போது அது வாழ்க்கையை திசை தெரியாமல் சிதைத்து விடுகிறது.
💭 *இன்றைய தற்சோதனை*
💭 நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அப்துல்கலாம் ஐயா அவர்கள் "கனவு காணுங்கள்" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி சொல்ல வந்த விஷயம் இதுதான். திட்டமிட்டுக் கொண்டு பின்விளைவை உணர்ந்து செயலாற்றுங்கள், என்பதைத்தான் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் என்ற வார்த்தையை முன்மொழிந்து, நம்மையெல்லாம் ஊக்கப்படுத்தினார்கள். ஆகவே திட்டமிட்டு செயலாற்றி வாழ்வில் வெற்றி காண்பது என்பதே, நம்முடைய வாழ்க்கைக்கும் நம் கருமையத்திற்கும் பொருத்தமானதாகும். எந்த வழி வகையிலும் உங்களுடைய வாழ்க்கையை போலியான கற்பனைகளுக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
💭 *இன்றைய பண்புப்பயிற்சி*
💭 மனவளக்கலை அன்பர்கள் அனைவரும் தயவுகூர்ந்து சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இவைகளை வாழ்க்கையில் அமுல்படுத்தி வாழமுயற்சி செய்யுங்கள். எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் உங்களால் முடிந்தவரை கடைபிடித்து வாழுங்கள். அடுத்த தலைமுறைக்கான ஒரு பழக்கமாகவும், அடித்தளமாகவும் இது அமையட்டும். தயவுகூர்ந்து அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக உருவாக்க, வாழ வழிவகை செய்வீர்களாக. வாழ்க வளமுடன்...
💭 *இன்றைய மூலிகை*
💭 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
💭 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
💭 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
💭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💭 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💭 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment