நித்தியகடன் ஜனவரி 21 2021

⛳♨️⛳♨️⛳♨️⛳♨️⛳♨️⛳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 21*

⛳♨️⛳♨️⛳♨️⛳♨️⛳♨️⛳

🏜️ *இன்றைய நித்தியகடன்*

🏜️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🏜️ *இன்றைய சாதகம்*

🏜️ வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🏜️ *இன்றைய நற்சிந்தனை*

🏜️ நாம் இருக்கும் சூழ்நிலைகளை சரியாக சிந்தனை செய்து, அதை நன்மையாக (positive) எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு அமையப்போகும் சூழ்நிலையை கூட யூகித்து அதனை உணர்ந்து கொள்ளக்கூடிய, தெளிவான சிந்தனை ஓட்டம் நமக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அயரா விழிப்பு நிலையோடு நாம் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

🏜️ *இன்றைய தற்சோதனை*

🏜️ நம்மை கண்காணிப்பதற்கு முறையாக பயிற்சி செய்து பழகவேண்டும். பலவிதமான வாழ்க்கை சூழ்நிலைகளில் நாம் எங்கேயும், எப்போதும், எதன் இடத்திலேயும், சிக்கிக்கொள்ளாமல் சங்கடங்கள் இல்லாமல் வாழ்க்கையை சீராக வாழ்வதற்கு பேருதவியாக அமையும். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறக்கூடிய ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்ச்சியை கூட தற்சோதனை செய்து, அதனுடைய நன்மை தீமைகளை கணக்கிட்டுக் கொண்டு எப்போதும், விழிப்பு நிலையோடு இருக்க பழக வேண்டும்.

🏜️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🏜️ நடந்து முடிந்ததற்கும் இனி நடக்க வேண்டியதற்கும், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதில் நாம் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு பக்கமாக நம்மை இழுத்துச் செல்லும். ஆங்காங்கு நம்முடைய தேவைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணம், நோக்கம், செயல் இம்மூன்றும் தூய்மையாக இருந்தால் விளைவு சரியாகவே அமையும். எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவமும் நமக்கு தாராளமாக அமைந்துவிடும். இறைவனை உணர்ந்து உண்மையாய் நமக்கென உள்ள வாழ்க்கையில் வாழ்வோம் எங்கேயும் எப்பொழுதும். வாழ்க வளமுடன்...

🏜️ *இன்றைய மூலிகை*

🏜️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🏜️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🏜️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏜️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏜️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏜️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments