🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 20*
🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥❄️🔥
🌞 *இன்றைய நித்தியகடன்*
🌞 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌞 *இன்றைய சாதகம்*
🌞 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🌞 *இன்றைய நற்சிந்தனை*
🌞 உயிரில் இருக்கக்கூடிய கோடானகோடி உண்மைகளை எல்லாம் உயிருக்குள் ஒதுங்கி நின்றால் தான் நம்மால் உணர முடியும் இந்த உண்மைகளை உணர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மனிதனுக்குள் பூரணமாக இருக்கிறது முறையான பயிற்சியை மேற்கொண்டு தன்னார்வத்தோடு முயற்சி செய்யும் போது படிப்படியாக நம்மால் இதில் வெற்றி பெற முடியும். முடியும் என்ற நம்பிக்கையை முதலில் நமக்குள் விதைப்போம் அது முளைத்து எழுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அதற்கு வழங்குவோம்.
🌞 *இன்றைய தற்சோதனை*
🌞 உயிருக்குள் மனதை நடுங்கச் செய்து மனதை முழுமையாக உயிராகவே மாற்றும் முயற்சி யோக சாதனை ஆகும் இந்த சாதனை மார்க்கத்தில் நமக்கு பேருதவியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய வேதாத்திரியம் முழுமையாக நம்மை நமக்குள் அழைத்துச் செல்லும் சிறப்பான பயிற்சிகள் அனைத்தும் உள்ளடக்கமாக பெற்றதாகும் நம்பிக்கையோடும் நெஞ்ச துணிவோடும் இந்த முயற்சியில் நம்மை நாமே முன்னடத்திச் செல்லவோம் இந்த அகநோக்கு பயணத்தை இனிதே துவங்குவோம்.
🌞 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌞 கண்களுக்கு புலப்படாத துகள் துகலாக உயிர் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உயிருக்குள் ஒடுங்கினால் தான் உயிரினுடைய உண்மையை மனதால் உணர்ந்து கொள்ள முடியும் மனம் புறத்தில் விரிந்து இயங்கிக் கொண்டே இருந்தால் உன்னுடைய உண்மையை தன்மையை மனதினால் ஒரு நாளும் ஒரு பொழுதும் உணர்ந்துகொள்ள முடியாது உயிரின் மத்திம பொருளுக்குள் ஒடுங்கி அதுவாகி உணர வேண்டிய உண்மைகள் ஏராளமாக இருக்கிறது வாழ்க வளமுடன்...
🌞 *இன்றைய மூலிகை*
🌞 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌞 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🌞 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌞 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌞 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌞 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment