நித்தியகடன் ஜனவரி 19 2021

💢🔘💢🔘💢🔘💢🔘💢🔘💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 19*

💢🔘💢🔘💢🔘💢🔘💢🔘💢

🕳️ *இன்றைய நித்தியகடன்*

🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🕳️ *இன்றைய சாதகம்*

🕳️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🕳️ *இன்றைய நற்சிந்தனை*

🕳️ குண்டலினி யோகப் பயிற்சியில் இணைந்துள்ள அன்பர்களுக்கு இந்த ஐந்து வகையான நிலைபாடுகள் அவர்களுக்குள் காலத்தால் உருவாகும், என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்கள். அவை என்னவெனில் இணக்கத்தன்மை, பெருந்தகைமை, படைப்புத்திறன், ஏற்புத்திறன், நுண்மாண் நுழைபுலன் இந்த ஐவகையான நிலைப்பாடுகளும் குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கருமையத்துக்குள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். இவற்றின் விளைவாக அவர்களின் மூளை செல்கள் அனைத்தும் ஊக்குவிக்கப்படும்.

🕳️ *இன்றைய தற்சோதனை*

🕳️ நாள் தவறாமல் பயிற்சியை செய்து வரும் அன்பர்களுக்கும், மேலே சொல்லப்பட்ட இந்த ஐவகையான நிலைபாடுகளும் அவர்களுக்குள் கட்டாயம் எழுச்சி பெறும் என்பது உண்மை. இதில் இன்று நாம் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளோம் என்பதை தற்சோதனை செய்து கொண்டே இருங்கள். மேலும் வளர்ச்சி பெறுவதற்கு நமக்காக இருக்கும் வாய்ப்புகளை ஆய்வு செய்து கண்டறிந்து கொண்டு அவைகளை விரிவாக்கம் செய்யுங்கள். இதற்கு நேர் எதிராக உள்ள தடைகள் என்னென்ன என்பதை சரியாக யூகித்து அவைகளை நீக்கி கொள்ளுங்கள்.

🕳️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🕳️ பயிற்சி செய்தல், தேவையற்ற செயல்பாடுகளை, சிந்தனைகளை அறவே தவிர்த்தல் இவ்வாறான முயற்சி ஒவ்வொரு மனவளக்கலை அன்பர்களுக்கும் கட்டாயம் தேவை. இவைகளை முறையாக கணக்கிட்டுக் கொண்டு அளவு மீறாமல், முறை மாறாமல் எல்லாவகையிலும் நிறைவாய் வாழும் பண்பில் நாளுக்குநாள் சிறந்து ஓங்கவேண்டும். இது நமக்கு கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பு. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பண்படைவோம் பயன்பெறுவோம். வாழ்க வளமுடன்...

🕳️ *இன்றைய மூலிகை*

🕳️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🕳️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🕳️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕳️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕳️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments