♾️🔲♾️🔲♾️🔲♾️🔲♾️🔲♾️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 17*
♾️🔲♾️🔲♾️🔲♾️🔲♾️🔲♾️
🏟️ *இன்றைய நித்தியகடன்*
🏟️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🏟️ *இன்றைய சாதகம்*
🏟️ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🏟️ *இன்றைய நற்சிந்தனை*
🏟️ இந்த பூமியில் உயிரும் உடலுமாக நாம் இருக்கும் வரை நமக்கென்று சில பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. உயிரை மதித்து நாம் நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டால், அதற்கு தகுந்த விளைவு என்பது கட்டாயம் நமக்கு அமைந்தே தீரும். உயிருக்குயிரான செயல்களிலிருந்து நம்மை சீர்திருத்தம் செய்து கொள்ளவேண்டிய ஒரு முழுமையான பிறவி இந்த மனிதப் பிறவி ஆகும். இந்த பிறவிக்கு தகுந்த செயல் பண்புகளில் நாம் நம்மை உயர்த்திக் கொள்வோம்.
🏟️ *இன்றைய தற்சோதனை*
🏟️ நம்முடைய பரு உடலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. ஆனால் உயிர் உடலுக்கும் காந்த உடலுக்கும் எல்லை என்பது கிடையாது. அது எல்லையற்ற நிலையில் விரிந்து இணைந்து அதுவாகவும் எதுவாகவும் மாறக் கூடிய பெரும் சிறப்புக்கு உரியது. இந்த சிறப்பினை நாம் முறையாக பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையின் இன்னொரு பகுதிக்கு நம்மை நாம்தான் அழைத்துச் செல்ல வேண்டும். இன்பம் துன்பம் உணர்ச்சி என்ற நிலைகளை எல்லாம் கடந்து பேரின்ப நிலையோடு நிலைத்து வாழும் வாழ்க்கை அது.
🏟️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🏟️ மனம் பலவிதமான குணங்களில் இயங்கும் போது இந்த சிறப்புத்தன்மை சீராக சிறப்பாக அமைவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி மனதால் மனதை உணர்ந்துகொண்டு அறிவை அறியக்கூடிய பெறும் முயற்சியில், தன்னை ஆர்வத்தோடு ஈடுபடுத்தி தன்னிலை விளக்கம் பெறக்கூடிய சிறப்புமிக்க வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கையை நாம் வாழ்வதற்காகத்தான் இந்த மனித பிறவிக்கு வந்திருக்கிறோம். அறிவை அறிந்து கொள்ளும் இந்த முயற்சியில் நமக்கு பாதுகாப்பாக வழி நடத்தி நம்மை அழைத்துச் செல்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே வேதாத்திரியம். பயன்படுத்தி பயன் காண்போம், நாமும் நம் குடும்பமும், உலக மக்களும்... வாழ்க வளமுடன்...
🏟️ *இன்றைய மூலிகை*
🏟️ *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🏟️ *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🏟️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏟️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏟️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏟️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment