நித்தியகடன் ஜனவரி 16 2021

🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 16*

🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀

🎱 *இன்றைய நித்தியகடன்*

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎱 *இன்றைய சாதகம்*

🎱சனிக்கிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🎱 *இன்றைய நற்சிந்தனை*

🎱 நம்முடைய கண்ணெதிரே இருக்கக்கூடிய வாய்ப்புகளில் நாம் மயங்கியும் பிறரை மயக்கியும் என்ன லாபம் இருக்கப்போகிறது. அவற்றின் விளைவுகள் நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம். ஆகவே வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்தோடு எடுத்து வையுங்கள். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நம்முடைய அடுத்த தலைமுறை பின்தொடர தயாராகிக்கொண்டு இருக்கிறது, என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. விருப்பத்தோடு சில கட்டுப்பாடுகளை நாம் இன்று ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். புலன் மயக்கத்தில் உணர்ச்சிவயப்பட்டு எந்த ஒரு செயலையும் செய்து விடக்கூடாது.

🎱 *இன்றைய தற்சோதனை*

🎱 உயிரோடு நாம் வாழ்கின்றோம் என்பதற்கான சரியான அடையாளம் என்னவென்றால் "நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும், துன்பம் தரமாட்டேன். துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்" என்ற இரண்டொழுக்கப் பண்பாட்டை பின்பற்றி வாழ்வது ஒன்றே ஆகும். நம்முடைய வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம் ஒன்று உடல் சார்ந்தவை, மனம் சார்ந்தவை, உயிர் சார்ந்தவை என்று. இதில் உயிர் சார்ந்த வாழ்க்கையே மற்ற இரண்டிற்கும் பொருத்தமானதாகும். உடல் சார்ந்த, மனம் சார்ந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தால், அது ஒரு காலகட்டத்தில் நன்மையையும், மறு காலகட்டத்தில் தீமையையும் கட்டாயம் உருவாக்கிவிடும்.

🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎱 உயிர் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உயிரைப் பற்றிய தேடல் தெளிவு, இந்த இரண்டும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவசியம். இந்த தேடலின் வழியில் நாம் நகர துவங்கினோமானால், நம்முடைய வாழ்க்கையில் அன்றுமுதற் கொண்டு இயற்கையோடு இணைந்து வாழும் பண்பில் நாம் உயர்வோம். உயிர் வாழ்க்கையும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையும் வேறு வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான். இதை எளிமையாக தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் மூலமாக துன்ப விளைவுகள் இல்லாமல் செய்து கொள்ளும் வாழ்க்கை முறை என்று விளங்கச் சொல்லலாம். வாழ்க வளமுடன்...

🎱 *இன்றைய மூலிகை*

🎱 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎱 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments