நித்தியகடன் ஜனவரி 11 2021

🌀🌋🌀🌋🌀🌋🌀🌋🌀🌋🌀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 11*

🌀🌋🌀🌋🌀🌋🌀🌋🌀🌋🌀

💐 *இன்றைய நித்தியகடன்*

💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💐 *இன்றைய சாதகம்*

💐 திங்கட்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.

💐 *இன்றைய நற்சிந்தனை*

💐 எந்த ஒன்றை நாம் மதிப்பீடு செய்தாலும், அது அக்ரினை உயர்திணை எதுவாக இருப்பினும், நம்முடைய மதிப்பு என்னவோ அதற்கு உட்பட்டுத்தான் இருக்கும். நாம் செய்து முடித்த மதிப்பீடானது, அதனுடைய உண்மையான மதிப்பீடாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. நம்முடைய அறிவின் நுட்பத்தையும், திறமையையும், தன்மையையும் இவைகளுடைய மதிப்பை உயர்த்துவதற்காக ஆசான் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எல்லா வகையிலும் பயிற்சி முறையை வகுத்து கொடுத்திருக்கிறார்கள்.

💐 *இன்றைய தற்சோதனை*

💐 நம்முடைய மதிப்பு என்ன என்பதை எவ்வாறு நாம் அடையாளம் தெரிந்து கொள்வது. மிகவும் எளிது நாம்முடைய எண்ணம், சொல், செயல் இவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ, அதுதான் நம்முடைய மதிப்பு ஆகும். இந்த சமுதாயத்தைப் பற்றியும், அண்டை அயலார் பற்றியும், நம்முடைய கருத்து என்னவோ அது நம்முடைய மதிப்புமாகும். மற்றவர்களை மதிப்போடு நாம் நடத்தும்போது நம்முடைய மதிப்பு உயர்ந்து இருக்கும். இதற்கு நேர் எதிராக நடந்து கொண்டால் அந்த அளவு தான் நம் மதிப்பும் இருக்கும். அதுதான் நம்முடைய மதிப்பின் அடையாளம்.

💐 *இன்றைய பண்புப்பயிற்சி*

💐 நம் கருமையத்தில் இருக்கக்கூடிய விலங்கின பதிவுகளின் எழுச்சிதான் நம்முடைய நடையில், உடையில், பாவனையில் வெளிப்படுகிறது, என்ற உண்மையை உணர்ந்து விலங்கின பதிவுகளை அமைதிப்படுத்தி, மனித பண்போடு வாழும் பயிற்சியை மேற்கொண்டு, நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். நமக்குள் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. "பெருமைக்கும் ஏனையச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" திருக்குறளை சிந்தித்து நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நல்லதோர் கருமையத்தை உருவாக்கி தருவோம். சீரோடும், சிறப்போடும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

💐 *இன்றைய மூலிகை*

💐 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

💐 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

💐 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

💐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💐 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments