நித்தியகடன் ஜனவரி 10 2021

🍂🌊🍂🌊🍂🌊🍂🌊🍂🌊🍂

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 10*

🍂🌊🍂🌊🍂🌊🍂🌊🍂🌊🍂

🎱 *இன்றைய நித்தியகடன்*

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎱 *இன்றைய சாதகம்*

🎱 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🎱 *இன்றைய நற்சிந்தனை*

🎱 வாழ்க்கையில் துணிந்து முடிவெடுத்து அறிவின் பக்கம் நில்லுங்கள். அறிவை சார்ந்த செயலுக்கும் சிந்தனைக்கும் உங்களுடைய வாழ்க்கையில் அதிகமாக இடம் கொடுத்து பழகுங்கள். உங்களை உண்மையான நிலைபாடோடு இணைத்துக்கொண்டு, போலிகளிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உடலும் உடல் சார்ந்த உண்மைகளும், உயிரும் உயிர் சார்ந்த உண்மைகளும், அறிவும் அறிவு சார்ந்த உண்மைகளும் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

🎱 *இன்றைய தற்சோதனை*

🎱 நீங்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும், என்பதை நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறாக நீங்கள் முடிவு எடுத்துக்கொண்டு அந்த முடிவில் வைராக்கியமாக இருந்து, திறம்பட வாழ்வதற்கு மனவளக்கலை யோகாவை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தவிதமான இடர்பாடுகள் இன்னல்கள் வந்தாலும் விடாமுயற்சியோடு தொடர்ந்து பயிற்சியோடு இணைந்து வாழுங்கள். நிறைவான முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கு தயாராகுங்கள்.

🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎱 அறிவு ஒன்றே இப்பிரபஞ்சத்தில் நிலையானது ஆகும். இந்த அறிவுக்கு உங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அறிவுசார்ந்த திறமைகளை மேம்படுத்திக் கொள்ள கொஞ்சம் உங்கள் புலன்களை பயன்படுத்தும் போதும், கர்மேந்திரியங்கள்ளை பயன்படுத்தும் போதும், அறிவை அடிப்படையாகக் கொண்டு சிந்தனை செய்து முடிவெடுத்து பயன்படுத்துங்கள். புலன்களை கர்மேந்திரியங்களை கடந்து உயிரோடு இணைந்து வாழ்வதற்குரிய நிலைபாடு அங்கேதான் உருவாகும். உயிரை உணர்ந்து அறிவில் இணைந்து நாமாக நாம் வாழ்வோம்‌‌. வாழ்க வளமுடன்...

🎱 *இன்றைய மூலிகை*

🎱 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎱 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments