💥🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 09*
💥🍀💥🍀💥🍀💥🍀💥🍀💥
💯 *இன்றைய நித்தியகடன்*
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💯 *இன்றைய சாதகம்*
💯 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💯 *இன்றைய நற்சிந்தனை*
💯 வாழ்க்கை சூழ்நிலையில் நாம் எதன் நினைவாக அதிகம் இருக்கிறோமோ, நாம் எதனோடு அதிகம் தொடர்பு கொண்டு வாழ்கிறோமோ, அதனுடைய தன்மையும் தரமும், நம்முடைய தரத்தையும் தன்மையையும் உயர்த்தும் அல்லது தாழ்த்தும். இதன் வேறுபாடுகளை சரியாக சிந்தனை செய்து புரிந்து கொள்ளாமல், மேலும் மேலும் தவறான புரிதலோடு குழப்ப நிலையில் மனிதர்கள் வாழ்க்கை தடுமாறுகிறார்கள். இந்த தடுமாற்றம் ஏற்படும் போது அதற்கான சரியான முயற்சியில் தன்னை தரத்திலும் தன்மையிலும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
💯 *இன்றைய தற்சோதனை*
💯 பூவோடு இருந்தால் பூவாசம். அதேபோல் காய்ந்து போன பின் அதிலிருந்து எந்த வாசமும் வீசாது. ஆக மனதை ஈவு இறக்கத்தோடும், வாசனையோடும் பராமரித்து வாழ்வோம். இவ்வாறான சிந்தனையும் செயல்பாடும் நம்மிடையே இருக்குமேயானால் எத்தகைய குழப்பம் ஏற்பட்டாலும், வாழ்க்கை சூழ்நிலைகள் திசை மாறாமல் தடம் மாறாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
💯 *இன்றைய பண்புப்பயிற்சி*
💯 ஆகவே நாம் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும், எதனோடு நாம் அதிகமாக தொடர்பு வைத்திருக்க வேண்டும், என்ற தெளிவு நம்மிடையே தேவை. இந்த தெளிவான மனநிலையில் நாம் வாழும் சூழ்நிலையை நாம் நிர்ணயித்து விட முடியும். நம்முடைய வாழ்க்கை பயணத்தை திசை மாறாமல் தடம் பிறலாமல் ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியும். இவ்வாறாக நாம் வாழும் போது அது இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். வாழ்க வளமுடன்...
💯 *இன்றைய மூலிகை*
💯 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
💯 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment