🍃🍥🍃🍥🍃🍥🍃🍥🍃🍥🍃
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 07*
🍃🍥🍃🍥🍃🍥🍃🍥🍃🍥🍃
♨️ *இன்றைய நித்தியகடன்*
♨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
♨️ *இன்றைய சாதகம்*
♨️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
♨️ *இன்றைய நற்சிந்தனை*
♨️ மிகவும் பிரம்மாண்டமான, வசதிவாய்ப்புகள் நிறைந்த இந்த மனிதப்பிறவி, அறிவின் குறைபாடு காரணமாக தன்னுடைய சுயத்தை இழந்து, தற்கால சூழ்நிலையில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும், இடையே போராடிக் கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ள நிச்சயமாக நம்மால் முடியும்.
♨️ *இன்றைய தற்சோதனை*
♨️ எல்லாவிதமான நன்மைகளும் நமக்குள் பூரணமாக நிறைந்து இருக்கின்ற போதிலும், அவைகள் நம்மிடமிருந்து வெளிப்படாத வகையிலும் முறையிலும், நமக்குள் இருக்கக்கூடிய விலங்கின பதிவு அவைகளை தடுக்கிறது. இந்த பதிவை மட்டும் நாம் கண்டு கொண்டால் போதும் நம்முடைய சுயம் நமக்குள் இருந்து வெளிப்படும்.இந்த அறிவின் குறைபாட்டை நீக்கி கொள்வது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.
♨️ *இன்றைய பண்புப்பயிற்சி*
♨️ இதற்கு முறையான பயிற்சி, முயற்சி, தேர்ச்சி இவை இல்லாமல் நிச்சயமாக நம்முடைய பிரம்மாண்டம், நமக்கான வசதி, வாய்ப்பு, பூரணத்துவம் இதனை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அவைகளை முறையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த யோக சாதனையை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நாள் தவறாமல் செய்யக்கூடிய செய்முறை பயிற்சியாக வழங்கியிருக்கிறார்கள். அன்று அன்று சேரும் அழுக்கை கசடை அன்றன்றே நீக்குவோம். வாழ்க வளமுடன்...
♨️ *இன்றைய மூலிகை*
♨️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
♨️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
♨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
♨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
♨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
♨️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment