🔮🕯️🔮🕯️🔮🕯️🔮🕯️🔮🕯️🔮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 06*
🔮🕯️🔮🕯️🔮🕯️🔮🕯️🔮🕯️🔮
⚖️ *இன்றைய நித்தியகடன்*
⚖️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⚖️ *இன்றைய சாதகம்*
⚖️ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
⚖️ *இன்றைய நற்சிந்தனை*
⚖️ ஒன்றை தேடி உயிர் எப்போதும் பயணம் செய்துகொண்டே இருக்கிறது. அந்த ஒன்று எது என்பது உயிருக்கு மட்டுமே தெரியும். உயிர், மனம், உடல் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடிய இயக்க முறைக்கு பெயர்தான் வாழ்க்கையாகும். உயிரோ தன்னுடைய மூலத்தைத் தேடி ஓடுகிறது, மனமோ புலன்வயப்பட்ட நிலையில் மயங்கி இயங்குகிறது. மனதினுடைய போக்கு வேறாகவும், உயிரினுடைய போக்கு வேறாகவும், இருக்கும்போது அந்த இடத்தில் ஏற்படுவதுதான் அனைத்து சிக்கல்களுமாகும். உடலில் ஏற்படும் நோய்களுக்கும், மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கும், வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்களுக்கும் இது மட்டுமே காரணம்.
⚖️ *இன்றைய தற்சோதனை*
⚖️ வாழ்க்கையின் அமைப்பும் உடலின் இயக்கமும், ஒரு மொட்டு எப்படி மெதுவாக மலருமோ அந்த நிகழ்ச்சிக்கு ஒப்பானது, இந்த வாழ்க்கை அமைப்பு. மெதுவாக நிதானமாக மலர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய அவசரத்துக்கும் தேவைக்கும் நம் வாழ்க்கையில் எந்த ஒன்றும் உடனடியாக நடைபெற்று விடாது, என்ற உண்மையை உணர்வோமாக. இயற்கைக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளில் நம்மை பொறுமையாக இணைத்துக் கொண்டு நிறைவாக வாழ முயற்சி செய்வோம்.
⚖️ *இன்றைய பண்புப்பயிற்சி*
⚖️ விளம்பர வாழ்க்கையில் மயங்கி விடாமல் மனதைப் பண்படுத்தி உயிர்ப்போடு வாழும் முயற்சிக்கு, நம்மை முழுமையாக அர்ப்பணித்து படிப்படியாக நாம் பெறக்கூடிய வெற்றிகள் தான் உண்மையான வாழ்க்கையாகும். மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும், நம்மை விடுவித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. நம்மை பார்த்து நம்முடைய சந்ததிகளும் இதே வழியில் வாழ முயற்சி செய்வார்கள். ஆக மிகுந்த பொறுப்போடு இருந்து, உயிருக்கான கடமையை நிறைவாக செய்து, வாழ்வில் நிறைவு பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
⚖️ *இன்றைய மூலிகை*
⚖️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
⚖️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
⚖️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⚖️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment