🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 01*
🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐🔥🌐
🍂 *இன்றைய நித்தியகடன்*
🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍂 *இன்றைய சாதகம்*
🍂 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍂 *இன்றைய நற்சிந்தனை*
🍂 இந்த பிரபஞ்ச களத்தில் பல்வேறு வகையான காந்தங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் ஒரே வார்த்தையில் வான்காந்தம் என்று பேசுகின்றோம். அவைகளை முறையாக பகுத்து பிரித்து உணர்ந்தால், பல்வேறு வகையான காந்த ஆற்றல் பிரபஞ்சத்தில் இருப்பதை உணரலாம். ஒவ்வொரு கோள்களில் இருந்து வரும் காந்தத்தின் தன்மை வேறுபடும். இதேபோன்று ஒவ்வொரு நட்சத்திர தொகுதிகளில் இருந்து வரும் காந்த அலையும் வேறுபடும். ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலிருந்து வரும் காந்த அலையும் வேறுபடும். இவை அனைத்திலும் தன்மை மாறும், தரம் மாறும், மனிதர்களுக்குள் பாய்ந்து இயங்கும் திறன் மாறும். ஆக ஒரே மாதிரியாக பிரபஞ்ச வான் காந்த சக்தி கிடையவே கிடையாது.
🍂 *இன்றைய தற்சோதனை*
🍂 அவரவருடைய பருஉடல் தாங்கும் தகுதியை எப்போது பெறுகிறதோ, அப்போது அந்த அந்த காந்த சக்தியோடு உயிர் துகள்கள் இணையும். இந்த உடலுக்கு வான்காந்த தீர்க்கமான இணைப்பை உயிர் துகள்கள்தான் முடிவு செய்கின்றன. ஆக உயிர் துகள்கள் எந்த அளவுக்கு வலிமையோடும் ஆற்றலுடனும் இயங்குகிறதோ, அதைப் பொருத்தே ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும். இதனை ஆழமான மௌனநோம்பு மேற்கொண்டு தற்சோதனை செய்து பாருங்கள்.
🍂 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍂 கருமையம் தூய்மை பெற்றால் தான் ஒவ்வொரு உயிர்துகள்களும் தூய்மையாகும். வித்து சக்தியில் இருக்கக்கூடிய தூய்மை உயிர்துகள்களை, அதனுடைய ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக பிரபஞ்ச காந்த சக்தியோடு ஒன்றிணைந்து இயங்கக்கூடிய ஆற்றலும் திறமையும் உயிர்துகள்களுக்கு கிட்டும். நல்ல எண்ணம், சொல், செயல் இவைகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் பண்பில் உயர்ந்தால் கருமையம் தூய்மை பெறும். வாழ்க வளமுடன்...
🍂 *இன்றைய மூலிகை*
🍂 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🍂 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🍂 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🍂 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍂 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍂 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍂 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment