நித்தியகடன் டிசம்பர் 31 2020

💥⏺️💥⏺️💥⏺️💥⏺️💥⏺️💥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 31*

💥⏺️💥⏺️💥⏺️💥⏺️💥⏺️💥

🎲 *இன்றைய நித்தியகடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 உயிரின் அழுத்தம், உயிரின் ஒலி, உயிரின் ஒளி, உயிரின் சுவை, உயிரின் மணம் இவைகள் எல்லாம் இருக்கின்றன. முறையான மனம் பண்பட்ட நிலையில் இவை அனைத்தையும் உணர முடியும். இந்த முயற்சியில் வேதாத்திரியம் உங்களுக்கு பேருதவியாக எப்போதும் பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும். இந்த பயணத்தில் உங்களுக்குள் ஏற்படும் அனுபவங்களை எல்லாம், இயல்பான மனநிலையிலிருந்து ஏற்றுக் கொள்ளுங்கள், மிகைப்படுத்தி எந்த ஒன்றையும் சிந்தித்து விடாதீர்கள்.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 மிகைப்படுத்தி சிந்தித்தால் உங்களுக்குள் குவிந்து கொண்டே வரும் பேரறிவும் பேராற்றலும், மறு சந்தர்ப்ப சுழ்நிலையில் குவிந்து இயங்கிய அனைத்தும் சிதைவடைந்து விடும். ஆகையால் மிகுந்த கவனத்தோடு கீழ்வரும் சிந்தனை பண்புகளை ஏற்றுக்கொண்டு உயிர் வாழ்வை வாழ துவங்குவோம். நாம் உணர வேண்டிய விஷயங்களை தான் உணர்ந்து இருக்கிறோமே தவிர, மிகைப்படுத்தி சிந்திப்பதற்கு எதுவுமே இல்லை, என்ற எதார்த்தமான இறை ஞானத்தில் நின்று வாழ்வோம்.

🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎲 புறத்திலிருந்து துவங்கி அகம் நோக்கி புலன்களை கடந்து உள்ளே செல்லும் பொழுது நமக்கு உண்மையான உயிரினுடைய நிலைபாடும் ஆத்ம தரிசனமும் கிடைக்க துவங்கும். இதற்கு நம்மை எல்லா வகையிலும் நாம் தூய்மை செய்து கொள்ள வேண்டும். எல்லா வகையிலும் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் மூன்றிலுமான இந்த பயணம் இனிதே துவங்கி இனிதே நிறைவு பெற வேண்டும். வாழ்க வளமுடன்... 

🎲 *இன்றைய மூலிகை*

🎲 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🎲 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎲 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments