நித்தியகடன் டிசம்பர் 30 2020

🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 30*

🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾🕸️🌾

❄️ *இன்றைய நித்தியகடன்*

❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

❄️ *இன்றைய சாதகம்*

❄️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

❄️ *இன்றைய நற்சிந்தனை*

❄️ இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு விதமான வாழ்வியல் கோட்பாடு இருக்கிறது. ஒன்றின் கோட்பாடு இன்னொன்றுக்கு பொருந்தாது. இவ்வாறு இயற்கை இயங்குவதினுடைய ஆழமான உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லா வகையான உயிர்களும் இறைநிலையின் தன்மாற்றம் என்றபோதிலும், அவை அவை வாழ்கின்ற வாழ்வியல் கோட்பாடு காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள், நோக்கம், திறமை இவைகளுக்கு தக்கவாறு மாறுபடுகிறது. இந்த மாற்றத்தை உருவாக்கி உள்ளும் புறமும் இருந்துகொண்டு இறைநிலையே ஆட்சி செய்கிறது.

❄️ *இன்றைய தற்சோதனை*

❄️ ஒவ்வொரு உயிரினங்களுடைய வாழ்வியல் கோட்பாடும் அதனதற்கு மட்டுமே பொருந்தும். ஒன்று மற்றொன்றுக்கு பொருந்தாது, தனித்தனியாக இறைநிலை இவ்வாறு அதன் அதனுள்ளேயே இருந்துகொண்டு, அது அதுவை அப்படியே உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்து தன் மாற்றத்திற்கு தன்னை எப்போதும் தகவமைப்போடு வைத்துக் கொண்டு, இயக்கிக் கொண்டே வந்து இந்த மனித உருவத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதனை உணர்ந்து கொண்டு வாழ்வில் சீர்திருத்தங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வோம்.

❄️ *இன்றைய பண்புப்பயிற்சி*

❄️ "பகுத்துணர்வில் தொகுத்து உணர்வு பண்பாட்டை உயர்தட்டும்" நாம் பகுத்துப் பகுத்து உணர்ந்து கொண்ட எல்லா நிகழ்ச்சிகளையும், சூழ்நிலைகளையும், தொகுத்து, எனக்கும், என்னுடைய உயிருக்கும், கருமையத்திற்கும் பொருத்தமானது என்ன? என்பதை உணர்ந்து தெளிவான மனநிலையில், எப்போதும் நிறைவாக வாழ்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவ்வப்போது ஏற்படக்கூடிய வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக தற்காத்துக்கொள்ள முடியும். இந்த பண்பில் நாமும் நம் குடும்பமும் நாளுக்கு நாள் சிறந்து ஓங்குவோமாக... வாழ்க வளமுடன்...

❄️ *இன்றைய மூலிகை*

❄️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

❄️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

❄️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

❄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

❄️ மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments