💐🔶💐🔶💐🔶💐🔶💐🔶💐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 29*
💐🔶💐🔶💐🔶💐🔶💐🔶💐
🌝 *இன்றைய நித்தியகடன்*
🌝 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌝 *இன்றைய சாதகம்*
🌝 செவ்வாய்கிழமை இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌝 *இன்றைய நற்சிந்தனை*
🌝 மனிதப்பிறவியின் சிறப்பினை இன்னும் மனிதர்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் மனிதனுடைய எண்ணங்களுக்கு ஈடு இணையாக எதுவுமே கிடையாது. "மனிதர்கள் யாருக்கும் அடிமை இல்லை, மனிதர்களுக்கும் எதுவும் அடிமை இல்லை, ஆனால் மனிதர்களுக்குள் இருக்கின்ற வினைப்பதிவுகளுக்கு மனிதர்கள் அடிமை" இந்த அடிமைத் தன்மையில் இருந்து மனிதர்கள் தங்களை தாங்களே மீட்டு எடுத்துக் கொள்ளக் கூடிய சிறப்பான வாய்ப்பே குண்டலினி யோகம், மனவளக்கலை,(sky yoga).
🌝 *இன்றைய தற்சோதனை*
🌝 தவமும், தற்சோதனையும் மனிதனுடைய மனோபலத்தை மேலும், மேலும் சிறப்பாக உயர்த்த வல்லது. இந்த பயிற்சி முறைகளை சரியாக புரிந்து, சிந்தித்து பலவிதமான தற்சோதனையில் தங்களை, தாங்களே ஆழ்த்திக் கொண்டு சிறப்புமிக்க மனிதர்களுடைய மனோசக்தியை அதனுடைய, மூல இயக்கத்தை, அந்த உயர்ந்த நிலையோடு மனதை இணைத்து கொள்ள வேண்டும்.
🌝 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌝 தவமும், தற்சோதனையும் மனிதனுடைய மனோபலத்தை மேலும், மேலும் சிறப்பாக உயர்த்த வல்லது. இந்த பயிற்சி முறைகளை சரியாக புரிந்து, சிந்தித்து பலவிதமான தற்சோதனையில் தங்களை, தாங்களே ஆழ்த்திக் கொண்டு சிறப்புமிக்க மனிதர்களுடைய மனோசக்தியை அதனுடைய, மூல இயக்கத்தை, அந்த உயர்ந்த நிலையோடு மனதை இணைத்து கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...
🌝 *இன்றைய மூலிகை*
🌝 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌝 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌝 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌝 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌝 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌝 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment