நித்தியகடன் டிசம்பர் 28 2020

🌿🔮🌿🔮🌿🔮🌿🔮🌿🔮🌿

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 28*

🌿🔮🌿🔮🌿🔮🌿🔮🌿🔮🌿

〽️ *இன்றைய நித்தியகடன்*

〽️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

〽️ *இன்றைய சாதகம்*

〽️ திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

〽️ *இன்றைய நற்சிந்தனை*

〽️ உடல், மனம், உயிர், அறிவு, இவை அனைத்தின் மதிப்பு என்ன என்று தெரியாமல் இவைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். இது எப்படி இருக்கிறது என்றால், கணினி அறிவு இல்லாத ஒரு நபரிடம் கணினி இருந்தால் அவர் அதை எப்படி பயன்படுத்துவாரோ அவ்வாறு இருக்கிறது. எந்த ஒன்றை நாம் பயன்படுத்துகிறோமோ அதனுடைய தன்மை, தரம், திறமை, நுட்பம் அனைத்தையும் அறிந்து கொண்டு அதை பயன்படுத்தினால் தான் அது முழு பயன்பாடாகும்.

〽️ *இன்றைய தற்சோதனை*

〽️ அகத்தவ, அகத்தாய்வுப் பயிற்சி இல்லாமல் இந்த நான்கினுடைய (உடல், மனம், உயிர், அறிவு) மதிப்பு என்ன என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உள்ளுணர்வு கல்வி மூலமாக நாம் கற்றுக்கொள்ளவேண்டிய, நம்மை மேன்மை படுத்தி கொள்ள வேண்டிய, உயர்த்திக் கொள்ள வேண்டிய நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டுக்கு நம்மை உயர்த்தும் அந்த நொடிப்பொழுது முதல் வாழ்க்கையினுடைய இன்னொரு பக்கம் நமக்கு அறிமுகமாகும். அதுவரையில் வாழ்க்கை என்பது இருட்டடிப்பாக, கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இருக்கும்.

〽️ *இன்றைய பண்புப்பயிற்சி*

〽️ நமக்கு இருக்கக்கூடிய பொறுப்புகளையும், கடமைகளையும் நாம் சரியாக உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு அதற்கு கீழ் நம்முடைய தேவைகளை முறைப்படுத்திக் கொண்டால் தான், மனித வாழ்க்கை என்பது நிறைவாக அமையும். இந்த நிறைவான வாழ்க்கையை நோக்கி இறைவன் நம்மை நகர்த்துகின்றான். இந்த நகர்வுக்கு ஒத்தவாறு நம்முடைய தேவைகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியது அவரவர்களுடைய பொறுப்பும், கடமையுமாகும். கடமை மறவாது, காலம் பிறழாது, கடமை செய்வோம். வாழ்க வளமுடன்...

〽️ *இன்றைய மூலிகை*

〽️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

〽️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

〽️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

〽️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

〽️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

〽️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

〽️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments