நித்தியகடன் டிசம்பர் 23 2020

👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 23*

👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️☄️👁️‍🗨️

🗾 *இன்றைய நித்தியகடன்*

🗾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🗾 *இன்றைய சாதகம்*

🗾 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.

🗾 *இன்றைய நற்சிந்தனை*

🗾 ஆறு மாத காலம் மண்ணோடு மண்ணாக இருந்து, அதனுடைய சத்துக்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டும், அந்தந்த காலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை எல்லாம் தனக்குள் தகவமைத்துக் கொண்டும், ஒரு நெற்பயிர் நெல்லை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு செய்யப்பட்ட விவசாயம் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. இப்போது காலத்தை சுருக்கி நிறைய நெல் ரகங்களை உற்பத்தி செய்கிறார்கள். இது ஆரோக்கியமில்லாத விவசாயமாக மாறிவிட்டது. இதனால் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உலகம் முழுவதும் நோய்கள் அதிகரிக்க காண்கின்றோம்.

🗾 *இன்றைய தற்சோதனை*

🗾 மெதுவாகத் துவங்கி நீடித்து நிலைத்து முடியும், ஒரு சிறப்பு அம்சங்களை கொண்டு நாம் இந்த விவசாயத்தை பின்பற்ற வேண்டும். அவசர உணவு உற்பத்தி, அவசர உணவு உண்ணும் பழக்கம், அவசரமாகவே உயிரும் உடலை விட்டு பிரிந்து விடுகிறது. மனிதர்களும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்களும் அறிவுபூர்வமாக உருவாகும் வரை நாம் இதைசற்று சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு இவைகளை தற்சோதனை செய்து ஏற்று கொள்ளலாம். அத்தகைய பயிற்சி முறையாக வேதாத்திரியம் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து உணர்வோமாக.

🗾 *இன்றைய பண்புப்பயிற்சி*

🗾 நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும், நடக்கவேண்டிய நிகழ்ச்சிக்கும், இடையில் திட்டமிட்டுக் கொண்டு, அதற்குத் தகுந்த சரியான முயற்சிகளை மேற்கொள்வது தான் மனித அறிவு, சிந்தனை, செயல்பாடு, சிறப்பு அனைத்துமாகும். நமக்கான பொறுப்புக்களும், கடமைகளும் ஏராளமாக இருக்கிறது, அவைகளில் சரியாக நம்மை பொருத்திக்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் இப்பண்புப் பயிற்சியில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அறிவில் முழுமை பெற வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...

🗾 *இன்றைய மூலிகை*

🗾 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.  

🗾 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

🗾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments