🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 18*
🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️👁️🗨️🛡️
🔘 *இன்றைய நித்தியகடன்*
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🔘 *இன்றைய சாதகம்*
🔘 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🔘 *இன்றைய நற்சிந்தனை*
🔘 தவறான எண்ணங்களை கவனத்துடன் தவிர்க்க வேண்டும். எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனதில் இயக்கவிட்டுக் கொண்டிருந்தாலே தவறான எண்ணங்களின் பலம் படிப்படியாக குறையும். எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது. அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாகத் திகழலாம்.
🔘 *இன்றைய தற்சோதனை*
🔘 எண்ணங்களை நாம் தான் வழிநடத்தவேண்டும் மாறாக எண்ணங்கள் நம்மை வழி நடத்தக்கூடாது. எண்ணமே எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி. அறிவோடு இணைந்து ஒன்றி நின்று எண்ணிட எண்ணிட இனிதே பயக்கும். எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவர் மகான், ஞானி.
🔘 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔘 எண்ணத்தின் வேகத்தையும் இயல்பையும் அறிந்து கொள்ள எப்போதும் மனதை நிதானமாக அமைதியாகவைத்து பழகும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவகையான சிக்கல்களுக்கும், தீர்வுகளும் எண்ணத்தின் வழியாகவே துவங்குகிறது, முடிகிறது.
எண்ணமே அனைத்தையும் இயக்கும் ஆற்றலாகும். அது அறிவோடு இணைந்து இயங்கும் போது அதுவே அருட்பேராற்றல்.
வாழ்க வாமுடன்...
🔘 *இன்றைய மூலிகை*
🔘 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🔘 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🔘 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🔘 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔘 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔘 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment