நித்தியகடன் டிசம்பர் 15 2020

🔶🕸️🔶🕸️🔶🕸️🔶🕸️🔶🕸️🔶

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 15*

🔶🕸️🔶🕸️🔶🕸️🔶🕸️🔶🕸️🔶

📊 *இன்றைய நித்தியகடன்*

📊 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

📊 *இன்றைய சாதகம்*

📊 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

📊 *இன்றைய நற்சிந்தனை*

📊 எந்த ஒன்றையும் வெறுக்காதீர்கள் உங்களுக்கு நேர் எதிர்மறையாக இருக்கும் பொருளாக இருந்தாலும், நபராக இருந்தாலும், அதனை வெறுக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் நம்முடைய சீவ காந்த அலை வான்காந்த அலையோடும், பிரபஞ்ச நிலைகளோடும் மோதுகிறது, சிதறுகிறது, ஊடுருவுகிறது, பிரதிபலிக்கிறது, இரண்டுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறாக இயங்கும் காந்த ஆற்றலும் அதனுடைய மதிப்பும் அளவிட முடியாதது. வெறுப்பு தன்மை முதலில் நம்முடைய உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கிறது. அதற்குப் பின்புதான் அந்தப் பொருள் மீதும், அந்த நபர் மீதும் விளைவை ஏற்படுத்துகிறது.

📊 *இன்றைய தற்சோதனை*

📊 சமயம், சாதி, மதம், இனம், மொழி, தேசம் உங்களுக்குள் இருக்கும் வினை பதிவுகள், உறவுகள், இவைகளை வெறுகிறீர்கள் அல்லது நேசிக்கிறீர்கள் என்றால், ஒன்றின் மீது அழுத்தமான பற்று இருக்கும் போது மற்றொன்றை இயல்பாகவே நீங்கள் வெறுக்க துவங்கிவிடுவீர்கள் இதுதான் உண்மை. எந்த ஒன்றின் மீதும் கடும் பற்று கொள்ளாதீர்கள். இயல்பாக இருந்து அனைத்து நிலைகளையும் தனதாக்கிக் கொண்டு தற்சோதனை செய்து, இயல்பாக வாழ்வதற்கும் செயல்புரிவதற்கும் முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு இது ஒன்றே சிறப்பான வழிமுறையாகும்.

📊 *இன்றைய பண்புப்பயிற்சி*

📊 விடியலை நோக்கி நாம் நகர்கிறோம், அந்நகர்வுகளை மற்றவர்களுடைய பார்வைக்காக உண்மை நிலை தன்மையை மறைத்து, உங்களை நீங்கள் இழந்து செயலாற்றுவதும் வாழ்வதும் உயிருக்கு உங்களுடைய பிறப்புக்கு பொருந்தாத செயலாகும். தர்மத்தை, நியாயத்தை, சத்தியத்தை காத்துக் கொண்டு அதனோடு பயணிப்பது தான் பிறப்புக்கு சிறப்பான தளத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த மனிதப் பிறவிக்கு உகந்த செயல் பண்பில் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்...

📊 *இன்றைய மூலிகை*

📊 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

📊 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

📊 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

📊 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

📊 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

📊 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments