நித்தியகடன் டிசம்பர் 14 2020

🌞💦🌞💦🌞💦🌞💦🌞💦🌞

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 14*

🌞💦🌞💦🌞💦🌞💦🌞💦🌞

🗻 *இன்றைய நித்தியகடன்*

🗻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🗻 *இன்றைய சாதகம்*

🗻 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🗻 *இன்றைய நற்சிந்தனை*

🗻 எந்த வகையான தொழிலிலும் நாம் முன்னேற வேண்டுமானால், அது சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அறிவில் உயராத பட்சத்தில் இதில் வெற்றிகாண்பது என்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதுபோலத்தான் நம் வாழ்க்கையை உடல், உயிர், மனம் இதன் மூலமாகத்தான் வாழ்கிறோம். ஆனால் அவை என்ன என்று புரியாததாலும், தெரியாததாலும் பல்வேறுபட்ட இன்னல்களையும், இடர்பாடுகளையும் வாழ்க்கையில் சந்திக்கின்றோம்.

🗻 *இன்றைய தற்சோதனை*

🗻 இப்போது புரிகிறதா நம் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் என்ன காரணம் என்று. உடல், உயிர், மனம் இவை எல்லாம் என்ன..? யாரால் இவைகள் இயக்கப் படு்கிறது.? எதனை பயன்படுத்துகிறோமோ அதனைப் பற்றிய தெளிவும், அறிவும் நமக்கு இல்லை. இதுவே நம் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் மூலகாரணமாக உள்ளது. இதனை ஆழமான சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தற்சோதனை செய்து வாழ்வில் உயர்வோம்.

🗻 *இன்றைய பண்புப்பயிற்சி*

🗻 விடாமுயற்சி, வைராக்கியம் எந்த அளவுக்கு நமக்குள் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றி இருக்கிறதோ அந்தளவுக்கு நம்மால் இறையுணர்வில் உயர முடியும். இறைவனை உணர்வதற்காகவே உருவான பிறப்பு இது. இந்த பிறவியுனுடைய முழுமையான சிறப்பில் நம்மை இணைத்துக் கொள்வோம் விடாமுயற்சியோடு திட்டமிட்டு செயல் புரிவோம். வாழ்க வளமுடன்...

🗻 *இன்றைய மூலிகை*

🗻 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🗻 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🗻 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🗻 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗻 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗻 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗻 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments