நித்தியகடன் டிசம்பர் 10 2020

〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 10*

〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️👁️‍🗨️〽️

🛰️ *இன்றைய நித்தியகடன்*

🛰️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🛰️ *இன்றைய சாதகம்*

🛰️ வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🛰️ *இன்றைய நற்சிந்தனை*

 🛰️ இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் அசையாமல் அப்படியே நிலையாக இல்லை. இந்த அசைவுகள் எப்படி ஏற்படுகிறது, எதனால் நிகழ்த்தப்படுகிறது, என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் தெரிந்து கொண்டு தெளிவு பெறவேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனுடைய பொறுப்பும், கடமையும், அவசியமுமாகும். மனஇயக்கம், உயிரியக்கம், உடலியக்கம், இறையியக்கம் இவை அனைத்தையும் உணரும் முயற்சி, சிந்தனை எல்லாமும் அறிவை அறிவதற்கும் அவ்வறிவில் தெளிவு பெறுவதற்குமான முதல் படியாகும்.

🛰️ *இன்றைய தற்சோதனை*

🛰️ தற்சோதனை என்பது எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் மட்டுமல்ல புரியாத எந்த ஒன்றையும் புரிந்து கொள்ள முனையும் போது அதற்குப் பெயரும் தற்சோதனையே. தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளுதல், தன்னிலை விளக்கம் பெறுதல்,
பெற்ற விளக்கத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஆய்வுகள் செய்தல் தற்சோதனையின் சிறப்பு.

🛰️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🛰️ அனைத்தியக்க அருட்பேராற்றலின் செயல்களையும், விளைவுகளையும் தெளிவாக உணர்வதற்கு நிதானமும், அமைதியும், விடாமுயற்சியும் அளவு கடந்து தேவைப்படும். அதனோடு இணைந்து ஒன்றி அதுவாகும் பண்பை உயர்த்திக்கொண்டால் அருள் பேராற்றலின் அன்புக்குரளை எவரேனினும் கேட்கலாம். வாழ்க வளமுடன்...

🛰️ *இன்றைய மூலிகை*

🛰️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🛰️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🛰️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🛰️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🛰️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🛰️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments