📊🔮📊🔮📊🔮📊🔮📊🔮📊
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 09*
📊🔮📊🔮📊🔮📊🔮📊🔮📊
🕸️ *இன்றைய நித்தியகடன்*
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🕸️ *இன்றைய சாதகம்*
🕸️ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🕸️ *இன்றைய நற்சிந்தனை*
🕸️ இயற்கை வளத்தை ஒருநாளும் சீரழித்து விடாமல் அதனை பாதுகாப்போடு பயன்படுத்தக்கூடிய ஒரு பண்பாடு உலகிற்கு தேவை. இந்த பண்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதர்களும் பிறருடைய மன உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சிந்தித்தல், செயல்படுதல், பேசுதல் என்ற பண்புகளை அவரவர்களுடைய வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு, சிறப்பாக வாழும் புதியதொரு பண்பாடு உலகிற்கு வேண்டும்.
🕸️ *இன்றைய தற்சோதனை*
🕸️ மேலும் போதை, போர், பொய், புகை இவை இல்லாத சமுதாயம் மலர்வதற்கு இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை எந்த மனக் குறையும் இல்லாமல் மனநிறைவோடு செய்வோமாக. தொலைநோக்கு சிந்தனையோடு மனித வாழ்க்கையின் உண்மைகளை இயற்கையின் உண்மைகளை புரிந்து கொண்டு, அதாவது தனக்கு என்னென்னவெல்லாம் வாழ்வதற்கு தேவையோ அவை அனைத்தும் தன்னிடமே இருக்கிறது, என்ற தெளிந்த உயிரோடு மலர்ந்த மனதோடு வாழும் புதியதொரு பண்பாட்டை உருவாக்குவோம்.
🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🕸️ இயற்கையினுடைய மிக சிறப்பு மிக்க அமைப்பும் இயக்கமும் மனிதனுக்குள் பூரணமாக இருக்கிறது. இதை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு மனப்பக்குவம் ஒன்று மட்டும்தான் வழிமுறையாகும். இயற்கையிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல நாமே இயற்கையாவோம். இயற்கையை விட்டு பிரிக்க முடியாத அளவிற்கு நாமும் இயற்கையும் ஒன்றாகவே இருக்கிறோம். நம்முடைய பண்புகளை உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு வாழும்போது மனப்பக்குவம் இயல்பாகவே அமைகிறது. இயற்கையை மதித்தல் இயற்கையோடு இணைதல் என்ற இந்த சிறந்த பண்பில் உயர்வோம், வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🕸️ *இன்றைய மூலிகை*
🕸️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🕸️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🕸️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🕸️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🕸️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment