🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 08*
🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 இயற்கை விவசாயத்தை காக்க வேண்டியது பசிக்காக உணவு உண்டு வாழும் அணைவரது பொறுப்பும் கடமையுமாகும். உணவு என்பது ருசிக்க மட்டுமல்ல, அது உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான ஆதாரம், உணவு தான் உடலாக வந்திருக்கிறது, ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான உணவால் தான் வந்தது. உங்களுடைய அடுத்த சந்ததிக்கான ஆதாரமும் இயற்கை உணவும் விவசாயமும் தான்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 "எல்லா உணவும் உணவல்ல நோய் தராத உணவே உணவு"
🍁 உணவே ஏழு தாதுக்களான ரசம், ரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சீவ வித்துக் குழம்பு என்று மாறுகிறது. நல்ல உணவு நல்ல தாதுக்களாக தன்மாற்றம் பெறும். ஆரோக்கியமில்லாத உணவு ஆரோக்கியமில்லாத தாதுக்களாகவும், நோயாகவும் மாறுகிறது. உணவே மருந்து என்பதை தற்சோதனை மூலமாக தெளிவாக உணர்ந்து கொள்வோம்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 விழிப்பு நிலையோடு மனதையும், அறிவையும் இயக்கி பழகி உடல் தத்துவங்களையும், இயற்கை தத்துவங்களையும் சீராக சிறப்பாக உணர்ந்து கொள்வோமாக, அயரா விழிப்பு நிலையோடு இருந்தால் மட்டும்தான், இந்த தத்துவங்கள் அனைத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். தத்துவங்கள் என்றால் வேறு ஒன்றும் அல்ல, கோட்பாடு, அளவுமுறை, செயலுக்குத் தக்க விளைவு. விளிப்புநிலையோடு இருந்து வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍁 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment