🔶🌏🔶🌏🔶🌏🔶🌏🔶🌏🔶
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 05*
🔶🌏🔶🌏🔶🌏🔶🌏🔶🌏🔶
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 அஃக்றிணை உயர்திணை என்று எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் அதனதன் கருமையத்திலேயே இருந்துகொண்டு, அதன் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்ப இப்பேரண்டத்தையும் உலக உயிர்களையும் உருமாற்றிக் கொண்டும், உணர்வுகளை உயர்த்திக்கொண்டும், தானும் அதுவாக இருந்துகொண்டும், அனைத்தையும் இயக்கிக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது இறைநிலை.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 ஒவ்வொரு மனிதனுடைய அறிவும், திறமையும், ஆற்றலும் அளவிட முடியாத அளவிற்கு இருக்கிறது. ஆனால் மனிதர்களால் அவைகளை சரியாக ஊக்குவித்து கொள்ள முடிவது இல்லை. அதனை ஊக்குவித்து கொள்வதற்கு பெயர்தான் யோக சாதனை என்று முன்னோர்களால் வழங்கப்பட்டது. யோகா என்பது வாழ்வியல் உண்மை. அதனோடு இணைந்து இயங்கி பழகும்போது தான் அதனுடைய ஆழம், அகலம், நீளம் அனைத்தும் புரியும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 யோக சாதனை என்பது தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது மட்டும் அல்ல. அதுவாகவே தன்னை மாற்றிக்கொண்டு அனுபவத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதே ஆகும். இந்த பிரம்மாண்டமான தன்மாற்ற சரித்திரத்தை, நம்முடைய வரலாற்றை, நம்முடைய சொந்த கதையை நாமே அறிந்து கொள்வதற்கான முயற்சியில் நம்மை வெற்றி பெற செய்வதற்காகவே இந்த மனவளக்கலை யோகப் பயிற்சியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளி இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍁 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment