நித்தியகடன் நவம்பர் 30 2020

⏳♨️⏳♨️⏳♨️⏳♨️⏳♨️⏳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 30*

⏳♨️⏳♨️⏳♨️⏳♨️⏳♨️⏳

🎱 *இன்றைய நித்தியகடன்*

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎱 *இன்றைய சாதகம்*

🎱 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🎱 *இன்றைய நற்சிந்தனை*

🎱 எப்போது எப்போதெல்லாம் உங்களுக்கு மிகப்பிடித்த சூழ்நிலையிலும், செயலிலும் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்கிறீர்களோ, அப்போது அப்போதெல்லாம் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி உண்மைதான், ஆனால் இந்த "இனம் புரியாத" என்ற உணர்வை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டும், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதனை அப்படியே விட்டு விட்டால் நம்மை திசை மாற்றி விடும், ஒழுங்கற்ற செயல்கள் நம்மில் தூண்டப்படும். இதனை நம் முன்னோர்கள் சிற்றின்பம் என்ற வார்த்தையினால் அடையாளப்படுத்துகிறார்கள்.

🎱 *இன்றைய தற்சோதனை*

🎱 இதை புரிந்து கொள்ள முடியாதா? என்றால் புரிந்து கொண்டு தான் ஆக வேண்டும். இதனை புரிந்து கொள்ளாமல் நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக, ஆறாவது அறிவில் முழுமை பெறும் விதமாக வாழ முடியாது. இந்த இனம்புரியாத மகிழ்ச்சியும், மனநிறைவும், நம்முடைய மூளை செல்களில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றம், பழைய பதிவுகளில் இணைப்பு, அவைகளினுடைய ஆதிக்கம், சஞ்சிதா, ஆகாமிய கர்மவினைகளின் தூண்டல். தற்சோதனை வழியாக இவைகளை சந்தித்து, சிந்தித்து, சீர்திருத்தம் செய்வோம்.

🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎱 நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த அத்தனை சம்பவங்களையும், சூழ்நிலைகளையும், பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இந்த அளவற்ற மகிழ்ச்சி, இனம் புரியாத சந்தோசத்தையும் அனுபவித்திருப்பீர்கள். நிரந்தரமான மகிழ்ச்சி என்பது திட்டமிட்டுக் கொண்டு, ஆறாவது அறிவில் முழுமை பெறுவது. திட்டமிட்டு செயலாற்றும் போது உங்களை நீங்களே கண்காணிக்கிறார்கள், அயராவிழிப்பு நிலை உருவாகிறது. இந்தப் பண்பே ஞானத்தில் நம்மை உயர்த்த வல்லதாகும். நிரந்தரமான மகிழ்ச்சி, பேரின்பம், ஆறாவது அறிவில் முழுமை பெருதல் இதில் நாலனளுக்கு நாள் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...

🎱 *இன்றைய மூலிகை*

🎱 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🎱 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🎱 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments