நித்தியகடன் நவம்பர் 28 2020

🌳☁️🌳☁️🌳☁️🌳☁️🌳☁️🌳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 28*

🌳☁️🌳☁️🌳☁️🌳☁️🌳☁️🌳

🌏 *இன்றைய நித்தியகடன்*

🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌏 *இன்றைய சாதகம்*

🌏 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.

🌏 *இன்றைய நற்சிந்தனை*

🌏 இந்த பூமியின் முழு அன்பையும், கருணையையும், தியாகத்தையும், சகிப்புத்தன்மையையும், விட்டுக் கொடுத்தலையும் தயவு செய்து சிந்தித்து பார்ப்போம். நாம் இதுவரை உண்ட உணவும், இனி மேலும் உண்ணப் போகும் உணவும் இந்த பூமி தந்தது, நமக்கான சுவாசக்காற்றை இந்த பூமியே மரங்களை பயன்படுத்தி தயாரித்து தருகிறது. நாம் பருகுவதற்கான நீரை சுமந்து சுழன்று கொண்டிருக்கிறது இந்த பூமி. அது மட்டுமின்றி மேகத்தில் இருப்பு வைத்து தேவையான நேரத்தில் வெப்பமூட்டி மழையாக பொழியவைக்கிறது.

🌏 *இன்றைய தற்சோதனை*

🌏 இந்த பூமியில் உள்ள வளங்களை எல்லாம் நம் வாழ்வின் வளமாக மாற்றி பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் இந்த பூமியை நாம் பாதுகாக்கிறோமா? அல்லது பாதிப்படையச் செய்கிறோமா? என்று சிந்தித்தால், கிடைக்கும் விடை இந்த பூமிக்கு நாம் செய்தது எல்லாம் பாவம், துரோகம், அநியாயம். நமக்கு இந்த பூமி கொடுத்திருப்பதை நம்மால் நிச்சயமாக இந்த பூமிக்கு எதைக் கொடுத்தும் ஈடுகட்ட முடியாது, ஆனால் பாதுகாக்கலாம். இந்த பூமியை பாதுகாக்க நம்மால் முடிந்ததை செய்வோம்.

🌏 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌏 இந்த பூமியை வாழ்த்துவோம்! இந்த பூமியால் உருவான நம் உடலை வாழ்த்துவோம்! இந்த உடலுக்குள் இயங்கும் உயிரை வாழ்த்துவோம்! இவை அனைத்தையும் உணரும் மனதை வாழ்த்துவோம்! இவை அனைத்தையும் வாழ்த்தி மதித்து இவற்றிடம் நம்மை சரணாகதி செய்வோம். பொறுப்பை உணர்ந்து கடமையாற்றி கடைதேறுவதற்காக கடமையை செய்வோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும், உள்ளதை உணர்ந்து, நல்லதை செய்து, அல்லதை தவிர்த்து நாமும் நம் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்வோம். வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்...

🌏 *இன்றைய மூலிகை*

🌏 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🌏 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🌏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌏 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments