💠♻️💠♻️💠♻️💠♻️💠♻️💠
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 25*
💠♻️💠♻️💠♻️💠♻️💠♻️💠
🔘 *இன்றைய நித்தியகடன்*
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🔘 *இன்றைய சாதகம்*
🔘 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔘 *இன்றைய நற்சிந்தனை*
🔘 துகள்கள் எல்லாம் ஒன்று கூடி கொத்துக்கொத்தாக தன்னை தானே தகவமைத்துக் கொண்ட நிகழ்ச்சிக்கு பின்னால் இந்த பஞ்சபூதங்கள், கோடான கோடி சூரிய குடும்பங்கள், உயிரினங்கள் என அனைத்தும் உருவானது. இவைகள் அனைத்திலும் இருப்பது துகள்களே. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்று பல்வேறு தன்மைகளில் இருந்தாலும் தாவரம், புழுக்கள், பறப்பன, நடப்பன, மனிதன் என்று உயிரினங்களாய் வந்தாலும் இவை அனைத்திலும் நடப்பது என்னவென்றால், துகள்கள் கூடி துகள்கள் பிரியும் நிகழ்ச்சியை தவிர வேறு எதுவுமே கிடையாது.
🔘 *இன்றைய தற்சோதனை*
🔘 இந்த எளிமையான உண்மையை உணர்வதற்கு நாம் பலவகையான தியாகங்களை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் பயிற்சியும் பலமான முயற்சியும் செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் எளிமையையும் யதார்த்தத்தையும் விட்டு விட்டு, மாயைக்குள் புலன் மயக்க இன்ப துன்ப உணர்சிகளுக்குள் நம்மை தொலைத்து விட்ட காரணத்தால், இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் எளிமையாக நடந்து முடிந்து கொண்டிருப்பதை உணர முடிவதில்லை. முறையான பயிற்சி இந்த எளிமையை உணர்வதற்கு நம்மை நிச்சயமாய் தயார்படுத்தும்.
🔘 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔘 இறை துகள்கள் கூடி அணுக்கள் பிரிவதே இந்த பிரபஞ்ச இயக்கம் ஆகும். இந்த உண்மையோடு நாம் நம்மை அடிக்கடி சிந்தனையாலும் செயலாலும் இணைத்து இணைத்து, அதைப்பற்றிய ஆய்வுகளில் தற்சோதனைகளில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அதற்கான தன்மையை பெருக்கிக் கொள்ளும் போது, இந்த எளிமையான உண்மை எளிமையாகவே நமக்கு புரிந்து விடும். இதற்கெனவே உருவாக்கப்பட்டதுதான் மனவளக்கலை பயிற்சி முறைகள். இப்பயிற்சிகளை நாள் தவறாமல் செய்து நாமும் நம் குடும்பமும் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பெறுவோமாக வாழ்க வளமுடன்...
🔘 *இன்றைய மூலிகை*
🔘 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔘 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔘 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔘 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔘 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment