நித்தியகடன் நவம்பர் 24 2020

⚓🎪⚓🎪⚓🎪⚓🎪⚓🎪⚓

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 24*

⚓🎪⚓🎪⚓🎪⚓🎪⚓🎪⚓

🍂 *இன்றைய நித்தியகடன்*

🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍂 *இன்றைய சாதகம்*

🍂 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🍂 *இன்றைய நற்சிந்தனை*

🍂 மனிதர்களுக்கு இந்த மண்ணுலகில் பொறுப்புக்களும் கடமைகளும் என்று இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்த முறையில் தன்னை அடுத்தடுத்து, திட்டங்களை செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு மென்மேலும் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை முறையை வாழ வேண்டும். இது புலன் சார்ந்த அறிவில் மட்டும் வாழும் போது, நம்முடைய பொறுப்புக்களும் கடமைகளும் நமக்கு சரியாக புரிவதில்லை, நாம் தெரிந்து கொள்வதும் இல்லை புலன்களை கடக்க வேண்டும்.

🍂 *இன்றைய தற்சோதனை*

🍂 மனதை ஒருமுகப்படுத்தி தியானம், அகத்தாய்வு, உடற்பயிற்சி, காயகல்பம் இவைகளில் நம்மை இணைத்துக் கொள்ளும்போது இயல்பாகவே நம்முடைய மனமானது புலன்களை கடந்து செயல்படவும், சிந்திக்கவும், திட்டங்களை வகுத்துக் கொண்டு, அறிவோடு இணைந்து இந்த செயல்பாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து, விழிப்பு நிலையோடு வாழ்வதற்கு தன்னை தயார்படுத்தி கொண்டு, தன்னுடைய அனுபவத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய சிறப்பு நிலைக்கு உயர்கிறது.

🍂 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍂 மனிதர்கள் செய்திகளாக பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தெரிந்து கொண்டதில் அனுபவம் ஏற்படுவதற்கு மனதை பக்குவப்படுத்தி பழகினால் மட்டுமே முடியும். தெரிந்து கொள்வது என்பது இயல்பான அறிவு நிலையாகும். அனுபவம் பெறுதல் என்பது பேரறிவு ஆகும். இந்த பேரறிவு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள கூடிய பண்பில் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும், நாம் நம்மை தயார்படுத்திக் கொண்டே வாழ்க்கையை வாழும் போது, அந்த வாழ்க்கை தான் மனித வாழ்க்கையாக இறை ஞானத்தோடு கூடிய, வாழ்க்கையாகவும் மலர்கிறது வாழ்க வளமுடன்...

🍂 *இன்றைய மூலிகை*

🍂 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🍂 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🍂 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍂 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍂 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍂 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments